பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

செளந்தர கோகிலம்



என்று சொல்ல வந்துவிட்டார் முதலியார் நியாயமான வழியில் சம்பாதித்து, அவசியமான செலவுகளை மாத்திரம் செய்து கொண்டு காலந் தள்ளுகிற யோக்கியமான ஜனங்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இப்படித் திருட்டிலும், புரட்டிலும் இறங்குகிறதே இல்லை. ஆனால் வரவுக்கு மிஞ்சிய செலவு செய்து, கூத்துக்கும் கூத்திக்கும், குடிக்கும் கொடுப்பதற்காக, இப்படிப்பட்ட மோசங்களில் இறங்குகிற சோம்பேறிகள்தான் பெரும்பாலோராகப் பெருகிவிட்டார்கள். இதில் இன்னொரு விசேஷம் இருக்கிறது. ஒரு மிருக காட்சிச் சாலையில் எத்த னையோ வகையான மிருகங்களை எல்லாம் பிடித்து அடைத்து வைத்திருப்பதுபோல, இந்த ஊரில் எத்தனை ஜாதி மனிதர்கள் இருக்கிறார்கள் தெரியுமா! இங்கிலீஷ்காரர்கள், பிரஞ்சுக் காரர்கள், ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், சைனாக்காரர்கள், பர்மாக்காரர்கள், மலாயிதேசத்தார், அராபியர்கள், காபூலிகள், பஞ்சாபியர்கள், வங்காளத்து பாபுகள், பம்பாயிக்காரர்கள், பார்சி ஜாதியார்கள், குஜராத்திகள், மார்வாரிகள், கொங்கணர், மலையாளத்தார், தெலுங்கர், செளராஷ்டிரர், கன்னடர் தமிழர், துருக்கர் முதலிய சகலமான ஜாதி ஜனங்களும், இந்த ஊரில் இருக்கிறார்கள். எல்லாத் தேசத்திலும் உள்ள திருட்டுகளும் புரட்டுகளும் சாமர்த்தியங்களும் இந்த ஊரில் வந்து அற்றுப் போகின்றன. அதனாலேதான் இந்த ஊருக்கு அயோக்கியத்தனத் தில் இவ்வளவு பெருத்த கீர்த்திப் பிரதாபம் ஏற்பட்டிருக்கிறது” எனறாா.

முதலியார் தமது வாதத்தை நிறுத்தினாலும் வாயிலிருந்த சுருட்டை மாத்திரம் இலேசில் விடுகிறதில்லை என்று சொல்லு கிறவர்போல, அதைத் தமது பல்வரிசைகளினிடையில் வைத்து இடுக்கிக் கொண்ட வண்ணம் வழவழ கொழகொழ வென்று வார்த்தைகளை உபயோகப்படுத்தி மிகுந்த ஆத்திரம் கொண் டவர் போலத் தமது கைகளை நீட்டி நீட்டிப் பேசத் தொடங்கி, "அடே என்ன ஐயா இவர் இப்படிப் பேசுகிறார் வீட்டுக்கு வீடு வாசல் இருக்கிறதைய்யா திருடர்களும் மோசக்காரர்களும் இந்த ஊரில் மாத்திரந்தான் இருக்கிறார்களோ? மற்ற ஊர்களில் இல்லையோ? வெளியூர்களில் ஆயிரம் ஜனங்களுக்கு, ஐம்பது பேர் அயோக்கியர்கள் இருக்கிறார்கள். இந்த ஊரில் ஆறு லக்ஷம்