பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

செளந்தர கோகிலம்



இளையபுரம் ஜெமீந்தாரான சுந்தரமூர்த்தி முதலியாரே முக்கியஸ்தராகக் காணப்பட்டார்; சுந்தரமூர்த்தி முதலியார் போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பார்த்து, "எத்தனையோ ஆயிரம் ரூபாய் செலவு செய்து இந்த ஏற்பாடுகளையெல்லாம் நடத்துகி றோம். இவ்வளவும் உங்களால் நஷ்டமாய்ப் போய்விடும். அதோடு நல்ல யோக்கியமான மனிதர்களின் மேல் பொய்யான குற்றம் சுமத்தி, இத்தனை ஜனங்களுக்கு முன் அவரை அவமானப்படுத்தி அழைத்துக் கொண்டு போகிறீர்கள். இவ்வ ளவுக்கும் நாங்கள் உங்களைச் சும்மா விடுவோம் என்று எண்ண வேண்டாம். உங்களுடைய தாலியையெல்லாம் ஒட்ட அறுத்து விடுவோம். கடைசியில் நீங்கள் உங்களுடைய வேலையை இழந்து, வீட்டில் இருக்கும் சொத்துக்களை எல்லாம் இழந்து, ஜெயிலுக்குப் போய் செக்கு இழுக்கப் போகிறீர்கள். ஜாக்கிரதை. இன்றைய தினம் நிச்சயதாம்பூலம் மாற்றப் போகிறார்கள். இன்னும் சில நாட்களில் கலியாண முகூர்த்தம் நடக்கப் போகிறது. அதுவரையில் மாப்பிள்ளையை விட்டு வையுங்கள். உடனே எல்லா ஜனங்களும் போய்விடுவார்கள். அதன்பிறகு நீங்கள் வந்து இந்தப் பங்களாவின் எஜமானியம்மாளைக் கண்டு உங்களுடைய நியாயத்தைச் சொல்லிக்கொள்ளுங்கள். மாப் பிள்ளை குற்றம் செய்திருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்கள் இந்தக் கலியானத்தை நிறுத்த உங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை” என்று கூறிய வார்த்தைகளைக் கேட்ட பூஞ்சோலை யம்மாள், கற்பகவல்லியம்மாள், கோகிலாம்பாள் ஆகிய மூவரும் மட்டுக்கடங்கா வியப்பும், கலக்கமும் திகைப்பும் அடைந்து திக் பிரமை கொண்டு பதறிப்போய் குன்றி நின்றனர். மாப்பிள்ளை கண்ணபிரானைப் போலீசார் பிடித்துக் கொண்டு போக முயலுகிறார்கள் என்பது மாத்திரம் தெரிந்ததே அன்றி அவன் என்னவிதமான குற்றம் செய்தான் என்பது தெரியாமையால், அவர்கள் துடிதுடித்து நின்றனர். கண்ணபிரான் ஏதோ சண்டையில் அடிபட்டு இறக்கும் தருணத்தில் இருக்கிறானோ என்று முதலில சந்தேகங்கொண்டு எல்லாப் பெண்பிள்ளைகளும் பயந்து ஓடிவந்தார்கள் அல்லவா? அந்த முக்கியமான திகில் நீங்கி யது. கண்ணபிரான் அப்படிப்பட்ட தேக அபாயத்தில் இல்லை என்பதும், ஏதோ குற்றத்திற்காகப் போலீசார் அவனைப் பிடித்து