பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 2O7

ளென்பது எல்லோரும் அறிந்த விஷயமாதலால், அவரது இரக்கமும், தடுமாற்றமும் அடுத்த நிமிஷத்தில் மறைந்து போய் விட்டன. அவர் உடனே கற்பகவல்லியம்மாளை நோக்கி, 'அம்மா தாங்கள்தான் இவருடைய தாயார் போலிருக்கிறது. நாங்கள் இவரை எதற்காகப் பிடித்துக்கொண்டு போகிறோம் என்ற சங்கதி உங்களுக்கு நன்றாகத் தெரிந்ததாக இருக்க, ஒன்றை யும் அறியாதவர்போல நீங்களும் பேசுவது ஆச்சரியமாக இருக்கி றதே! நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து எவ்வளவு பிரமாதமாக தந்திரம் செய்திருக்கிறீர்கள்! அப்படி இருந்தும், சங்கதியெல்லாம் வெளியாகி விட்டது. திருட்டும் பரிஷ்காரமாக வெளியாகி விட்டது. இனி மறைப்பதில் உபயோகமில்லை. உங்களுடைய ரகசியமெல்லாம் இன்னும் சில தினங்களுக்குப் பிற்பாடு வெளியாகி இருந்தால், கண்ணபிரான் முதலியார் இந்த துபாஷ் முதலியாருடைய பெண்ணைக் கட்டிக் கொண்டிருப்பார். அது கெட்டுப் போய்விட்டது. அதுவும் தவிர, இந்த விருந்தாளி களுக்கு எல்லாம் அவரவர்களுக்குச் சேர வேண்டிய சாப்பாடு களும் கிடைத்திருக்கும். இவர்கள் எல்லாருக்கும் எங்கள் மேல் இவ்வளவு ஆத்திரம் உண்டாகியிருக்காது” என்று குறும்பாகவும், நிதானமாகவும், புன்சிரிப்போடும் பேசினார்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட கற்பகவல்லியம்மாள் கோபம் மூட்டப்பட்ட பெண் சிங்கம்போல நிமிர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டரை நோக்கி, "என்ன ஐயா! தாறுமாறாகப் பிதற்று கிறீர்? யாரைப் பார்த்து இப்படிப்பட்ட வார்த்தை சொல்லு கிறீர்? திருட்டாவது? வெளியாவதாவது? நாங்கள் இரண்டு பேரும் பிரமாதமான காரியத்தைச் செய்வதாவது? நீர் சொல்லுவது ஒன்றும் விளங்கவில்லையே! எங்களுடைய காலடி மிதித்த மனிதர் திருடராக இருந்தால்கூட, அவர்களுடைய திருட்டு புத்தி உடனே மாறிப்போகுமே! அப்படியிருக்க, யார் பேரில்லையா திருட்டுக் குற்றம் சுமத்துகிறீர். பையன் காலையில் எழுந்தால் தெய்வமே என்று அவனுடைய காரியங்களைப் பார்த்துக்கொண்டு, பகல் முழுவதும் ஆபீஸ் வேலையைச் செய்துவிட்டு, சாயங்காலமானால் வீட்டில் வந்து முடங்கிக் கொள்கிறான். இவன் உங்கள் வீட்டில் வந்து எதை ஐயா திருடி விட்டான்?' என்று நிரம்பவும் ஆத்திரமாகவும் வீராவேசத்