பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

செளந்தர கோகிலம்



தோடும் வினவ, அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர், "சரி; எனக் கென்ன! இத்தனை ஜனங்களுக்கு எதிரில் உங்களுடைய ரகசியத்தை வெளியிட்டு உங்களையும் இவர்களையும் ஏன் அவமானப்படுத்த வேண்டும் என்று நான் இதுவரையில் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். நீங்கள் என்னைச் சும்மா விடமாட்டேன் என்கிறீர்கள். சங்கதியைச் சொல்லுகிறேன் கேளுங்கள். சில தினங்களுக்கு முன் சைனா பஜார் தெருவில் ஒரு தபால் திருட்டு நடந்தது. அன்றையதினம் காலையில் அங்கே பட்டுவாடா செய்து கொண்டு போன தடாற்காரனை ஒரு வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போய், அவனைக் கட்டிப்போட்டுவிட்டு, அவனிடத்திலிருந்த 23,542 ரூபாயையும், பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள இன்ஷியூர் சாமான்களையும் 24-ரிஜிஸ்டர் காகிதங்களையும் எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள். அந்தத் திருட்டை இந்தக் கண்ணபிரான் முதலி யார் நடத்தினதாக அனுமானிக்கப்படுகிறது. அவ்வளவுதான் சங்கதி. இப்போது ஞாபகத்துக்கு வருகிறதா?’ என்று கற்பக வல்லியம்மாளை நோக்கிக் கூற, அதைக் கேட்ட அந்த அம்மாள் படமெடுத்த நாகமெனச் சீறி, "ஆகா! என்ன சொன்னிர்? யாரைப் பார்த்து இப்படிப்பட்ட வார்த்தை சொன்னிர்? குட்டிச் சுவரில் தேள் கொட்ட வைக்கோல்போரில் நெரிகட்டியதாக கதையாக இருக்கிறதே நீர் சொல்வது! சைனா பஜாரில் திருட்டு நடந்தால் புரசைப்பாக்கத்தில் சிவனே என்று விழுந்து கிடக்கும் எங்களுக்கும் அதுக்கும் என்ன ஐயா சம்பந்தம்? இதெல்லாம் போலீசாருடைய கைவரிசையோ? ஆட்டைத் துரக்கி மாட்டில் போட்டும், மாட்டைத் தூக்கி ஆட்டில் போட்டு, உங்களுடைய பாழும் வயிற்றை இப்படியும் வளர்க்க வேண்டுமா? அந்தத் திருட்டுக்கு ஒரு கைதி சம்பாதிக்க வேண்டுமானால், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று அதற்கு என் மகன்தானா உங்களுடைய கண்ணில் விழுந்தான்? இப்படிப் பட்ட அபாண்டமான அக்கிரமத்தில் இறங்கினால், நீங்கள் உங்க ளுடைய பெண்டு பிள்ளைகளுக்கு உதவாமல் போய்விடுவீர்கள் ஐயா. இவன் ஒவ்வொரு தினமும் காலை எட்டரை மணிக்கு ஸ்நானம் சாப்பாடு முதலியவற்றைத் துவக்கி ஒன்பதரை மணிக் கெல்லாம் வீட்டை விட்டுப் புறப்பட்டுக் கச்சேரிக்குப் போகிறவ