பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 2C9

னல்லவா? அப்படி இருக்க நீர் சொல்லும் தினத்தின் காலையில் இவன் சைனா பஜாருக்கு எப்படி ஐயா வந்திருப்பான்? இப்படி மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்றால், யாரை வேண்டுமானாலும் திருடனென்று பிடித்துக் கொள்ளலாம். ஏன் நீர்தான் அந்தத் திருட்டை நடத்தியிருக்கக் கூடாதா? நீர்தான் திருடிவிட்டு எங்கள் பேரில் அபாண்டமாகச் சுமத்துகிறீர் என்று நாங்கள் சொல்லுகிறோம்” என்று கூறினாள்.

தபால் திருட்டு நடந்ததைப் பற்றியும், அதைக் கண்ண பிரானே நடத்தினான் என்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொன்ன தையும், அதற்குக் கற்பகவல்லியம்மாள் சொன்ன மறுமொழி யையும் கேட்ட பூஞ்சோலையம்மாள் முதலிய சகலமான ஜனங் களும் கரைகடந்த வியப்பும், பிரமிப்பும் அடைந்து, தங்களது செவிகளையே நம்பாமல் பேச்சுமூச்சற்று அப்படியே ஸ்தம்பித்து நின்றனர். கண்ணபிரான் அப்படிப்பட்ட திருட்டைக் கனவிலும் செய்யாதவன் என்று எல்லோர் மனதிலும் பட்டதனாலும் அந்தச் செய்தி மகா புதுமையானதாகவும், என்றும் கேட்காத விந் தையாகவும் இருந்தமையால் எல்லோரும் கதி கலங்கி, எவ்வித யூகமும் செய்யமாட்டாமல் நின்றனர். பூஞ்சோலையம்மாளது அறிவு பிறழ்ந்தது. சிரம் சுழன்றது; பூமியில் நிற்கிறோமோ, அல்லது, பறக்கிறோமோ என்று பூஞ்சோலையம்மாள் சந்தேகம் கொள்ளும்படி அவளது மூளை கிறுகிறென்று மயங்குகிறது. தனது மூத்த புதல்வியின் நிச்சயதார்த்தத்தையும், கலியாணத் தையும் அதி விமரிசையாக நடத்த வேண்டும் என்ற அவாவி னால், லக்ஷம் ரூபாய் வரையில் வாரியிறைத்து மகா சிரேஷ்ட மான அலங்காரங்களையும், முதல் தரமான ஏற்பாடுகளையும் செய்து பெருத்த பெருத்த தனிகர்களான எத்தனையோ ஜனங் களை வரவழைத்து, முதன் முதலாக சுபகாரியம் நடத்தத் தொடங்குகையில், அபசகுனமாக அந்தச் சம்பவம் நேர்ந்ததும், அதனால், தனது ஏற்பாடுகளெல்லாம் வியர்த்தமாக கலியாணம் நின்று போக நேர்ந்ததும், தாங்கள் தேடிப்பிடித்த மணமகன் அத்தனை ஜனங்களுக்கும் முன்னிலையில் திருடன் என்ற பழிக்கு ஆளாக நேர்ந்ததும், பூஞ்சோலையம்மாள் சகிக்கக்கூடிய வரம்பை மீறிய சங்கடமானதாகவும், தலை குனிவானதாகவும் நிரம்பவும் கேவலமானதாகவும் இருந்தமையால் எண்சாண் செ.கோ.i-15