பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 21i

அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் தமது பொறுமையை இழந்தவராய், கற்பகவல்லியம்மாளை நோக்கிக் கோபமாகப் பேசத் தொடங்கி, "சரியான அதுமானத்தின்மேலேதான் வாரண்டு பிறந்திருக்கிறது என்று நான் சொல்லுகிறேன். அது எவ் விதமான அநுமானம் என்று சாதாரணமாகக் கேட்டால், நான் விவரத்தைச் சொல்லக் கூடும்; அதை விட்டு உங்களுக்குத்தான் வாயிருக்கிறது என்று இப்படிக் கூறுகெட்ட வார்த்தைகளைப் பேசுவதில் என்ன உபயோகம்? அநியாயமாக உங்கள் பையனைக் கொண்டு போய்த் தண்டிப்பதில் எங்களுக்கு ஏதாவது லாபம் உண்டா? அல்லது, ஐந்தரை லக்ஷம் ஜனங்கள் உள்ள இவ்வளவு பெரிய பட்டணத்தில் உங்களுடைய பிள்ளையின் மேல் மாத்திரம் எங்களுக்கு என்ன விரோதம் ஏற்பட்டு விட்டது? இவரை நாங்கள் முதல் முதலாக இப்போதுதான் பார்க்கிறோம். இந்தத் திருட்டில் இவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற சங்கதி எப்படியோ போலீஸ் கமிஷனர் துரைக்கு எட்டி, அவர் பிரசி டென்சி மாஜிஸ்டிரேட்டையும் அழைத்துக்கொண்டு இன்றைய தினம் காலை 7 மணிக்கு உங்களுடைய வீட்டுக்கு வந்து, பூட்டை உடைத்துக் கதவைத் திறந்து வீட்டைச் சோதனை போட்டுப் பார்த்தார்கள் பெட்டிகளை எல்லாம் திறந்து பார்த்தார்கள். திருட்டுச் சாமான் எதுவும் காணப்படவில்லை. ஆனால் உங் களுடைய நடுவிட்டின் ஒரு மூலையில் தரையில் குழிவெட்டிப் புதிதாக மூடி மணல் பூசப்பட்டிருந்த ஒர் இடத்தைக் கண்ட கமிஷனர் சந்தேகப்பட்டு, அந்த இடத்தை வெட்டிப்பார்க்க, அதற்குள் ஒரு பெட்டி இருந்தது. அவர்கள் உடனே அதை எடுத்துத் திறந்து பார்த்தார்கள். திருட்டுப்போன பணத் தொகையைத் தவிர மற்ற இன்ஷியூர் உருப்படிகளும், ரிஜிஸ்டர் கடிதங்களும் பந்தோபஸ்தாக அந்தப் பெட்டிக்குள் வைக்கப் பட்டிருந்ததை அவர்கள் கண்டு, அந்தத் தடயங்களை எல்லாம் கச்சேரிக்குக் கொண்டு போனார்கள். உடனே மாஜிஸ்டிரேட்டு வாரண்டு பிறப்பித்து என்னிடத்தில் கொடுத்து இவரைப் பிடித்துக் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்தார். அதன்மேல் நான் வந்தேன். இப்போது சரிதானா? இனி எவ்வித ஆக்ஷே பணையும் சொல்ல மாட்டீர்களே' என்று புரளியாகக் கூறினார். அந்த வரலாற்றைக் கேட்டு வந்த கண்ணபிரானது விழிகள்