பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

செளந்தர கோகிலம்



கோவைப்பழமாகச் சிவந்து தீப்பொறி சிந்தின; அவன் கட்டுக்கடங்காத வீராவேசமும் பதைப்பும் கொண்டவனாய், 'ஆ என்ன சொன்னிர்? இதெல்லாம் சுத்தக் கட்டுப்பாடு! எங்களுடைய வீட்டிலாவது பெட்டி புதைக்கப்பட்டிருப் பதாவது? நாங்கள் இந்த மூன்று தினங்களாக இல்லையென்பதைக் கண்டு, யாரோ பெட்டியை வைத்துப் புதைத்திருக்க வேண்டும்; அல்லது போலீசார் கட்டுப்பாடாகச் சொல்ல வேண்டும்; சுவாமி சாட்சியாகச் சொல்லுகிறேன்; இந்தத் திருட்டு நடந்ததே எனக்குத் தெரியாது” என்றான். உடனே கற்பகவல்லியம்மாள் உக்கிர நரசிம்ம மூர்த்திபோல மாறி, "ஐயோ! தெய்வமே! இப் படிப்பட்ட அபாண்டமான இடியை எங்கள் தலைமேல் கொண்டு வந்து வைக்கிறாயே? ஐயோ! நாங்கள் ஒரு பாவத்தையும் அறியோமே; இது யார் செய்த சதியோ தெரியவில்லையே! இது எந்தப் படுபாவி செய்த மோசமோ தெரியவில்லையே! எங்கள் வயிறு எரிகிற மாதிரி அவன் எரிந்து சாம்பலாய்த்தான் போய் விடுவான்' என்று கூறி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கோவெனக் கதறியழுது புலம்பலானாள்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர், "சரி, நேரமாகிறது. உங்க ளுடைய நியாயத்தை எல்லாம் கேட்டு முடிவு செய்ய நியாயாதி பதி இருக்கிறார். அங்கே வந்து நீங்கள் சொல்லி உங்களுடைய பிள்ளை குற்றமற்றவராக இருந்தால் விடுவித்து அழைத்துக் கொண்டு வாருங்கள். என்னுடைய வேலை நீதி செலுத்துவதல்ல. மேலதிகாரியின் சொற்படி அவருடைய கட்டளையை நிறை வேற்ற வேண்டியவன் நான். அடே ஜெவான்களே நடவுங்கள்” என்று அதட்டிக் கூற, உடனே ஜெவான்கள் கண்ணபிரானைக் கடத்திக் கொண்டு பந்தலை விட்டு நடக்கலாயினர்.

உடனே கற்பகவல்லியம்மாள் போலீஸ் இன்ஸ்பெக்டரை நோக்கி, "அப்படியானால் நாங்களே இவனைக் கொண்டு வந்து மாஜிஸ்டிரேட்டின் கச்சேரியில் ஆஜர் செய்கிறோம். நீங்கள் இவனுக்கு விலங்கு மாட்டி இப்படி அவமானப்படுத்தி அழைத் துப் போக வேண்டாம். இவன் சர்க்கார் உத்தியோகத்தில் உள்ள வன் அல்லவா. அப்படி இருக்க, இவன் ஒடிப்போவான் என்ற பயம் எதற்காக? அதுவும் தவிர, மடியில் கனமிருந்தால் அல்லவா