பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

செளந்தர கோகிலம்



கொண்டு போகட்டும். நீங்கள் இந்த வீட்டு அம்மாளிடத்திலும், அவர்களுடைய பெண்களிடத்திலும் இந்த விஷயத்திலாவது, வேறே எந்த விஷயத்திலாவது நான் பிறந்தது முதல் இது வரையில் ஒரு குற்றமும் செய்தே அறியாதவன் என்ற உறுதியைக் கூறுவதோடு, நம்மால் இவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் தெய்வச் செயலாக ஏற்பட்டதேயன்றி, நம்முடைய நடத்தை யினால் ஏற்பட்டதல்ல என்பதையும் சொல்லித் தேற்றுங்கள். நான் போய்விட்டு அதி சீக்கிரத்தில் திரும்பி வந்து விடுகிறேன். என்னைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப்படவே தேவையில்லை” என்று கூறித் தனது தாயைச் சமாதானப்படுத்த, கற்பகவல்லியம்மாள் அதற்கு இணங்காமல் அவனைப் பிடித்துப் பின்னிற்கு இழுக்க, போலீஸ் இன்ஸ்பெக்டரும் ஜெவான்களும் சிறிதும் பொறுமையின்றி முகத்தைக் காட்டிக் கடிந்து கண்ண பிரானை இழுக்கலாயினர்.

அந்தச் சமயத்தில் பெண்மக்களிருந்த கும்பலிற்குள் வெட்கித் தலைகுனிந்து நிலைகலங்கி நிற்க மாட்டாமல் தத்தளித்து வேறொரு பெண்ணின் தோளைப் பிடித்துக் கொண்டு நின்ற கோகிலாம்பாள் தனது தாயை நோக்கி, "அம்மா நம்முடைய பெட்டி வண்டியிலாவது வைத்து அழைத்துப் போகும்படி சொல்லலாகாதா?’ என்று நிரம்பவும் தணிவான குரலில் கூறு வதற்குள், அவளது வாய் பன்முறை குழறிப் போய்விட்டது. உடனே பூஞ்சோலையம்மாள் இன்ஸ்பெக்டரைப் பர்த்து, 'ஐயா கொஞ்சம் பொறுங்கள் இவரை இப்படி நடத்தி அழைத்துக் கொண்டு போக வேண்டாம். எங்களுடைய பெட்டி வண் டியைக் கொண்டுவரச் செய்கிறேன். அதற்குள் உட்கார வைத்து அழைத்துக் கொண்டு போங்கள். அது உங்களால் ஆகக் கூடிய காரியந்தானே. அதையாவது செய்யலாகாதா?’ என்று கூறி வேண்டிக் கொண்டவளாய், ஜனக்கும்பலை நோக்கி, "யாராவது போய்ப் பெட்டி வண்டியைக் கொண்டுவரச் சொல்லுங்கள் என்றாள்.

அதைக்கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், "நாங்களே ஒரு வண்டி கொண்டு வந்திருக்கிறோம். அது பங்களாவின் வாசலில் நிற்கிறது. அவரை அதில் வைத்துக் கொண்டு போகிறோம்.