பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 215

அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஐயா! கண்ண பிரான் முதலியாரே! நடவும்; நேரமாகிறது' என்று கூற, கண்ண பிரான் நடக்கலானான். அந்தச் சமயத்தில், "ஐயோ! கோகிலாம் பாளைப் பாருங்கள்! கோகிலாம்பாளைப் பாருங்கள்!” என்று சிலர் கூச்சலிட, பூஞ்சோலையம்மாள், கற்பகவல்லியம்மாள் முதலிய பெண் மக்கள் அனைவரும் திடுக்கிட்டுப் பின்புறம் திரும்பிப் பார்க்க, அதற்குள் கோகிலாம்பாள் மயங்கிக் கீழே சாய்ந்து தரையில் விழுந்து விட்டாள். பக்கத்தில் இருந்த ஸ்திரீ களில் நால்வர் குனிந்து அந்தப் பெண்மணியைத் துரக்கியெடுக்க, அவள் முற்றிலும் ஸ்மரணை தப்பிப் போய் பிணம்போல மாறிவிட்டாள். அவளது முகம் வெளுத்து விகாரமடைந்து பிரேதக்களை கொண்டு விட்டது. அந்த விபரீதத்தைக் கண்ட ஜனங்கள் எல்லோரும் கோகிலாம்பாள் இறந்து போயிருப்பார் க்ளோ என்று சந்தேகித்துப் பதறிக் கூக்குரலிட்டனர். பூஞ் சோலையம்மாள், ஐயோ அம்மா! மோசம் செய்து விட்டாயா! எங்களுடைய வாயிலெல்லாம் மண்ணைப் போட்டு விட் டாயா!' என்று ஒலமிட்டு அலறிய வண்ணம் ஓடிவந்து நெருங்கி னாள். சிலர், 'தண்ணிர் தண்ணிர்” என்றனர். சிலர் "டாக்டரை அழையுங்கள்” என்றனர். சிலர் “ஒரு கட்டிலை எடுத்துக் கொண்டு வாருங்கள், அதில் வைத்து உள்ளே கொண்டு போகலாம்” என்றனர். சிலர் 'விசிறி விசிறி” என்று கூவினர். வேறு சிலர், 'எல்லோரும் நெருங்கிக் காற்றை மறைக்க வேண்டாம், விலகுங்கள். குளிர்காற்று முகத்தில் வீசட்டும்” என்று அதட்டிக் கூறி ஜனங்களையெல்லாம் அப்பால் போகச் செய்து, கோகிலாம்பாளின் மீது காற்று வீசும்படி செய்தனர்.

அவ்வாறு எதிர்பாரா வகையில் உண்டான விபரீதக் கூக் குரல்களைக் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் திரும்பிப் பார்க்க, சர்வாபரண பூஷிதையாக மணக்கோலத்தோடு, கண் கொள்ளா வனப்பைச் சுமந்து, அழகின் திரளாய், ஜெகஜ்ஜோதி யாகக் கீழே விழுந்து மயங்கிக் கிடந்த கலியானப் பெண் அவருக்குத் தென்படவே, அவர் மயங்கித் தயங்கி ஸ்தம்பித்து வைத்த விழியை வாங்காமல், அப்படியே சிறிது நேரம் நின்று விட்டார். அதற்குள் போலீஸ் ஜெவான்கள் கண்ணபிரானை நடத்திக்கெண்டு, 10 - 15 கஜ தூரத்திற்கு அப்பால் போய்விட்ட