பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

செளந்தர கோகிலம்



மையாலும், கண்ணபிரான் தனக்கு ஏற்பட்ட அவமானத்தினால் குன்றிக் குழம்பி, தூக்கத்தில் நடப்பவன் போல, உலகத்தையும், தன்னையும் மறந்து, நடைப்பிணம் போலச் சென்று கொண்டி ருந்தான். ஆதலால், கோகிலாம்பாளுக்கு நேர்ந்த விபத்தை உணராதவனாய் ஜெவான்களோடு துயரமே வடிவாக நடந்து கொண்டிருந்தான். ஜனக்கூட்டத்திலிருந்த பெண்டிர் கோகிலாம் பாளைத் தூக்கி எடுத்துக் கொண்டு பங்களாவிற்குள் போகிற வரையில் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை அதற்கு மேல் தாம் அவ்விடத்தில் நின்றால் ஜனங்கள் ஏதேனும் வித்தியாசமாக நினைத்துக் கொண்டு தம்மை தூவிப் பார்களோ என்ற நினைவும் அச்சமும் கொண்டவராய் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு பங்களாவின் வாசலை நோக்கி நடக்கலானார். அவரது மனம் கோகிலாம்பாளது அதி யற்புத வனப்பிலேயே ஈடுபட்டு அந்தப் பங்களாவிற்குள்ளேயே நின்று விட்டது. அவர் தமது மனத்தையும், நினைவையும், உயிரையும் அவ்விடத்திலேயே பின் தங்கவிட்டு, வெற்று உடம் போடு, நடைபிணம் போல நடந்து, அடிக்கடி நெடுமூச்செறிந் தவராய், ராஜபாட்டைக்குப் போய்ச் சேர்ந்தார். ஏதோ ஒரு விதமான சஞ்சலமும், வேதனையும் அவரது மனத்தை உலப்பிக் கொண்டிருந்தன. கோகிலாம்பாளது தேஜோமயமான குளிர்ந்த வடிவம் அவரது அகக்கண்ணில் பதிந்து போய், மாறாமல் உறுதி யாக நின்று போனது. ஆகையால், அவர் இந்த இன்பகரமான எண்ணத்தில் ஆழ்ந்து தம்மையும் உலகையும் மறந்தவராய், சித்தப்பிரமை கொண்டவராக மாறிப் போனார். அவ்வாறு புதிய மனிதராக மாறுபட்டுச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பராங்குசம்பிள்ளை ராஜபாட்டைக்குப் போய்ச் சேர்ந்தபோது, அவ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வண்டியில் ஜெவான்கள் கண்ணபிரானை உட்கார வைத்திருந்தனர். வண்டிக்குப் பக்கத்தில் ஒரு மரத்தின் அடிக்கட்டையில் சார்த்தி வைக்கப்பட் டிருந்த பைசைகில் வண்டியை ஒரு ஜெவான் கொணர்ந்து இன்ஸ்பெக்டருக்கு எதிரில் நிறுத்த, அவர் அதன் மேல் உட்கார்ந்து கொண்டு செல்ல, ஜெவான்கள் வண்டியிலேறிக் கண்ணபிரானுக்கு முன்னும் பின்னுமாக உட்கார்ந்து கொண் டனர். உடனே வண்டிகள் இரண்டும் புறப்பட்டு விரைவாகச் சென்றன.