பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - வது அதிகாரம் மோசம் நாசம் கம்பளி வேஷம்

  • - ன்றைய பகற்பொழுது கழிய, மாலை நேரம் வந்தது; * 6 சென்னை சைனாபஜார் தெருவில் பச்சையப்பன் கலாசாலைக்கு எதிரிலுள்ள போலீஸ் ஸ்டேஷ }(که o னிற்குள் மறைவாக இருந்த ஒரு சிறைச்சாலைக்குள் கண்ணபிரான் துயரமே வடிவாக நின்று கொண்டிருந் தான். அந்த அறையின் மூன்று பக்கங்களிலும் ஜன்னல் முதலிய எவ்விதத் திறப்பும் காணப்படவில்லை. அதன் முற்புறத்தில் தடிப்பான இரும்புக் கம்பிகளாலான கதவுகளால் அந்த சிறைச் சாலை நிரம்பவும் பத்திரப்படுத்தப் பட்டிருந்தது. அந்த அறைக்கு வெளியிலிருந்த தாழ்வாரத்தில் தொங்க விடப்பட்டி ருந்த ஆறு பட்டை லாந்தரொன்று மங்கலாக எரிந்து கொண்டி ருந்தது. அந்த வெளிச்சம், கண்ணபிரான் இருந்த சிறைச் சாலைக் குள் அரைப்பாகம் வரையில் சென்றமையால், அதற்கு அப்பால் இருளாக இருந்தது. கண்ணபிரான் கலியாணக் கோலத்தோடு அழகே வடிவாக இருந்த நிலைமையில் பிடிபட்டவன், அதே அலங்காரத்தோடு சிறைச்சாலையில் அடை பட்டிருந்தான் ஆகை யால், அவனது தோற்றம் புதிதாகக் கூண்டில் அடைக்கப்பட்ட பஞ்சவர்ணக்கிளியின் தோற்றம்போல இருந்ததன்றி, காண் போரது கண்களையும் மனத்தையும் கலக்கி இளக்கி தனக்கு நேரிட்ட எதிர்பாராத அவகேட்டையும், சகிக்க இயலாத அவமா னத்தையும் கருதி, சொற்களினால் விவரிக்கக் கூடாத பரம சங்கட நிலைமையில் இருந்தான். ஆகையால், அன்று காலையில் அங்கே வந்தபிறகு அவன் ஆகாரத்தையாவது, தண்ணிரையாவது மனதாலும் நினைக்காமல் வாடி வதங்கி காம்பு ஒடிபட்ட தாமரை மலர் போலச் சோர்ந்து தளர்ந்து துவண்டு தள்ளாடிக் குழைந்து குழைந்து நின்றான். அவனது மனம் முழுதும் ராஜ ரத்தின முதலியாரது பங்களாவில் இருந்ததேயன்றி, அந்த இடத் தில் அவனது வெற்று உடம்பே நின்றது என்னலாம்படி அவன்