பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ić செளந்தர கோகிலம

தனது தேக பாதைகளையே உணராமல், விவரிக்க சாத்தியமற்ற மனோபாதையினால் உலப்பப்பட்டவனாக இருந்தான். தன்மீது திடீரென்று அபாண்டமாக ஏற்பட்ட அந்தப் பெரும் பழியானது தனக்கும் ராஜரத்தின முதலியாரது வீட்டாருக்கும் அறிமுகமும், நட்பும் ஏற்படுவதற்கு முன்னால் உண்டாகி இருக்கக் கூடாதா என்றும், அப்படியில்லாமல், தனக்குக் கலியானமாகும் சமயத் தில், ஆயிரக்கணக்கில் கூடியிருந்த ஜனங்களின் எதிரில் தனக்கு அப்படிப்பட்ட அடாப்பழி நேர்ந்ததே என்றும் நினைத்து நினைத்துக் கண்ணபிரான் மட்டிலடங்கா மனோவேதனையுற்று உருகி, உயிரை விட்டுக் கொண்டிருந்தான். அத்தனை ஜனங்க ளுக்கு முன் தனக்கு ஏற்பட்ட அபாரமான அவமானத்தைக் கோகிலாம்பாள் கேட்டுச் சகித்து உயிர் சுமந்து இருப்பாளோ என்றும், அவள் தன்னைப் பற்றி எவ்விதமான அபிப்பிராயமும் அருவருப்பும் கொண்டிருப்பாளோ என்றும் நினைக்க நினைக்க, அவனது எண்சாண் உடம்பும் ஒருசானாகக் குன்றி மேனி குலைந்தது.

முதல் நாளைய மாலையில் தானும் கோகிலாம்பாளும் பூஞ்சோலையில் தனித்திருந்து நிகரற்ற பேரின்ப சுகம் அநுபவித்திருந்த பிறகு தனக்கும் அந்த மடந்தைக்கும் அதி சீக்கிரத்தில் கவியாணம் முதலிய சடங்குகள் நிறைவேறி விடும் என்றும், உடனே தாங்கள் இருவரும் இந்திரன் இந்திராணி போலவும், ரதி மன்மதன் போலவும் கூடிக் கலந்து இன்புற்று சகல செல்வ போகங்களோடு அமோகமாக வாழலாம் என்றும், தான் எண்ணிய எண்ணத்தில் கடவுள் மண்ணைப் போட்டு, தான் கட்டியிருந்த மானஸிகக் கோட்டையை ஒரே நொடியில் இடித்தெறிந்து விட்டதை நினைக்க நினைக்க, அவனது மனதில் பெருத்த ஏமாற்றமும், துயரமும் எழுந்து கப்பிக் கொண்டன. அவனுக்குத் தனது வாழ்க்கையும், மனதும், உலகமும் பாழ்த்து இருளடைந்து தோன்றின. உலகிலுள்ள பிற மனிதரைக் காட்டிலும் தான் மகா அதிர்ஷ்டசாலியென்று அவன் அது வரையில் நினைத்துப் பூரிப்பும், தற்பெருமையையும் கொண்டு மகிழ்வடைந்து இருந்ததற்கு மாறாாக, அவன் இப்போது தன்னைக் காட்டிலும் கேவலமான துர்ப்பாக்கியனும், பரம தரித்திரனும் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டான் என்ற