பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

செளந்தர கோகிலம்



மாத்திரம் அவனது மனத்தில் மிகுந்த ஆறுதலையும், நம்பிக்கை யையும் உண்டாக்கிக் கொண்டிருந்தது. தன்னிடத்தில் கோகி லாம்பாள் கரை கடந்த காதலும், பிரேமையும் கொண்டிருக் கிறாள் என்ற உறுதியும், அவள் தனது உயிர் போவதானாலும் இனி தன்னையன்றி வேறே எவனையும் கணவனாக ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்ற உறுதியும் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கின. அவ்வாறு, தன்னை அபாரமாக மதித்துத் தன் மீது காதல் கொண்டுள்ள மங்கையின் மனம், தனக்கு நேரிட் டிருக்கும் அவமானத்தைக் கண்ட பிறகும், இடிந்து போகாமல், முன்போல் உறுதியாக இருக்குமோ என்ற ஐயம் எழுந்து ஒயாமல் வதைத்துக் கொண்டிருந்தது. தான் உண்மையிலேயே அந்தத் திருட்டுக் குற்றத்தைச் செய்தவன் என்று அந்த மடந்தை நினைத்து விடுவாளோ என்ற அச்சமும், கலவரமும் அவனது மனதில் எழுந்து வதைத்து வந்தது. கோகிலாம்பாள், பூஞ் சோலையம்மாள் மற்ற ஜனங்கள் ஆகிய எல்லோருக்கும் இடை யிலிருக்கும் தனது தாய் எவ்வித அவமானத்திற்கும், துன்பங் களிற்கும், இழிவிற்கும் ஆளாக நேருகிறதோ என்ற கவலையே பெருங்கவலையாக நிறைந்து வதைத்துக் கொண்டிருந்தது. தனது தாய் நிரம்பவும் மானமுடையவள் ஆதலால், அப்படிப்பட்ட பெருத்த இடியைத் தாங்க மாட்டாமல், அவள் ஒருகால் தனது உயிருக்கு ஏதேனும் தீங்கிழைத்துக் கொள்வாளோ என்ற நினைவும் ஓயாமல் சஞ்சலப்படுத்திக் கொண்டிருந்தது.

அப்படிப்பட்ட மகா பரிதாபகரமான நிலைமையில் இருந்த கண்ணபிரான் அந்த அற்புதமான திருட்டைப் பற்றியும்; அது தன்மீது சுமத்தப்பட்டிருப்பதைப் பற்றியும், நினைத்து நினைத்து அடக்க மாட்டாத வியப்பும் திகைப்பும் பிரமிப்பும் அடைந்து, அது யாரால் இழைக்கப்பெற்ற சதியாக இருக்கும் என்று யூகித்துப் பார்த்ததெல்லாம் எவ்விதப் பலனையும் கொடுக்காமல் போய்விட்டது. வேண்டுமென்று அந்தப் பழியைத் தன்மீது சுமத் துவதற்கு அவ்வளவு அதிகமான பகைமையைக் கொண்ட விரோதி ஒருவனாகிலும் தனக்கு இல்லை என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. ஆகவே, போலீசார் அந்தக் குற்றத்தை யாராகிலும் ஒருவன் மீது சுமத்தும் பொருட்டு, தன்னைப் பிடித் திருக்க வேண்டும் என்ற உறுதியே தோன்றிக் கொண்டிருந்தது.