பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 221

அப்படி இருந்தாலும், திருடப்பட்ட சொத்துக்கள் தனது வீட்டிற்கு யாரால் எப்போது கொணர்ந்து புதைத்து வைக்கப் பட்டிருக்கும் என்பது அவனுக்கு விந்தையாகத் தோன்றியது. கச்சேரியில் நடக்கப்போகும் விசாரணையில் போலீசார் எந்தவிதமான சாட்சியங்களைக் கொணர்வார்களோ என்றும், அந்த வழக்கு எந்தவிதமாக முடியுமோ என்றும் அது முடிய எவ்வளவு காலம் ஆகுமோ என்றும் அவன் பெரிதும் கவலை கொண்டவனாகத் தத்தளித்திருந்தான். தெய்வச் செயலாகத் தான் தப்பி வந்து விட்டால், எப்படியும் தான் கோகிலாம்பாளை மணந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்து வந்தது; ஆனால் தனது கெட்ட காலத்தின் பலனாக தான் தண்டனை அடைய நேர்ந்தால், அதன் பிறகு, தான் அவளை அடைவது சிறிதும் சாத்தியமில்லாத விஷயம் என்பது தெளிவாக விளங் கியது. இருந்தாலும் தான் குற்றமற்றவன் என்பதை அவளுக்கு எப்படி அறிவுறுத்துகிறது என்ற கவலையும், தான் இனி அவளைக் காணும் அதிர்ஷ்டம் தனக்கு நேரப் போகிறதா என்ற கவலையும், அப்படி நேர்ந்தாலும், அவளது முகத்தில் தான் எப்படி விழித்துப் பேசுகிறது என்ற கவலையும் எழுந்தெழுந்து அவனை ஒயாமல் வதைத்துக் கொண்டிருந்தன. ஆகவே, அவன் சிறிது நேரம் உட்காருவதும், சிறிது நேரம் இரும்புக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நிற்பதும், சிறிது நேரம் அங்கும் இங்கும் உலாவுவதுமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான். அவனது கண்களிலிருந்து கண்ணிர் பெருகி தாரை தாரையாக வழிந்து கொண்டேயிருந்தது. அவ்வாறு அவன் விசனமே வடி வாக உருகி ஒய்ந்து கிடந்த சமயத்தில் இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை அங்கே வந்தார்.

அவருக்குச் சுமார் முப்பது வயதிருக்கலாம். அவர் கருத்த மேனியும், பயங்கரமான முகம், மகா அழுத்தமும் ஆழமுமான மனதும் உடையவர். அவரது மனத்தின் உண்மையான தன்மை எப்படிப்பட்டது என்பது அவரைப் படைத்த ஈசுவரனாலும், அறியக் கூடாததாக இருந்தது. திருடனுக்கும் கன்னக்கோல் சார்த்த அந்தரங்கமான ஒர் இடமுண்டு என்று ஜனங்கள் சொல் லுவார்கள். ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை இந்த உலகத்தில் ஒரு மனிதரையாவது நம்புவதே