பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

செளந்தர கோகிலம்



தவிர, விலையுள்ள நகைகளும், பெருத்த பெருத்த நோட்டுகளும் வைத்து ரிஜிஸ்டர், இன்ஷியூர் முதலிய செய்யப்பட்ட கடிதங் களும் ஏராளமாக வரும்; அந்த இடம் ஜனங்கள் நிறைந்த நல்ல பந்தோபஸ்தான இடமாகையால், தபால் இலாகாதாரர்கள், ஒரே ஒரு தபாற் சேவகனிடத்திலே தான் அவ்வளவு விலையுயர்ந்த உருப்படிகளையும் கொடுத்து அனுப்புவது வழக்கம், அந்த ஏற்பாடு நெடுங்காலமாக நடந்து வருகிறது. அந்தத் தபாற்கார னுக்கு எவ்வித அபாயமும் நேர்ந்ததில்லை. இன்று காலையில் அந்தத் தபாற்காரன் ஏராளமான மணியார்டர் பணத்தையும், இன்ஷியூர், ரிஜிஸ்டர்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டு அவைகளைப் பட்டுவாடா செய்து கொண்டிருந்தவன் திடீரென்று காணப்படவில்லை. அவன் தனது வேலையை முடித்துக் கொண்டு மறுபடி பகல் 11% மணிக்குத் தபாற்சாலைக்குப் போக வேண்டியது கட்டாயமான ஏற்பாடு. அங்கேயும் அவன் போய்ச் சேரவில்லை. தபாற்சாலையின் அதிகாரி 12-மணி, 1-மணி வரையில் பார்த்துவிட்டு, மிகுந்த கவலையும் கலக்கமும் அடைந்து, தமது சிப்பந்திகளையெல்லாம் அனுப்பி, அந்தச் சேவகன் போகவேண்டிய இடம் முழுவதிலும் தேடிப்பார்க்கச் செய்தார். காலையில் வந்தவன், ஆரம்பத்திலுள்ள நாலைந்து வீடு களுக்கு மாத்திரம் மணியார்டர் முதலியவற்றைக் கொடுத்த தாகவும், அதற்குமேல் எவருக்கும் பட்டுவாடா செய்யவும் இல்லை, அப்புறத்தில் வரவும் இல்லை என்றும் சிலர் சொல்லக் கேள்வியுற்ற சிப்பந்திகள் திரும்பிவந்து அந்த விவரத்தைத் தபாற்சாலை அதிகாரியிடத்தில் தெரிவித்தனர்.

"அதைக்கேட்ட தபாற்சாலையின் அதிகாரி மிகுந்த திகிலும் திகைப்பும் அடைந்து உடனே போலீஸ் அதிகாரிகளுக்கும், தமது மேலதிகாரிகளுக்கும் அறிக்கை செய்துகொள்ள, உடனே போலீஸ் அதிகாரிகளும், தபால் இலாகா அதிகாரிகளும் வந்து கூடினர். அவ்வாறு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரும் தபால் இலாகா இன்ஸ்பெக்டர்களும் அந்தத் தபாற் சாலையின் போஸ்டு மாஸ்டர், குமாஸ்தா முதலியோருடைய வாக்குமூலங் களை வாங்கிக் கொண்டதன்றி, இன்றைய தினம் யார் யாருக்கு மணியார்டர், இன்ஷியூர் முதலிய உருப்படிகள் வந்திருந்தன என்பதற்கும் ஒரு ஜாப்தா வாங்கிக் கொண்டனர். அந்த