பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

செளந்தர கோகிலம்



கிடையாது. அவரது வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் மருந் திற்குக் கூட நிஜமான வார்த்தைகளே அகப்படுவது அரிது. எப் படிப்பட்ட பெரிய குற்றமாக இருந்தாலும் அதைக் கண்டு பிடிப் பதற்குப் பராங்குசம் பிள்ளைதான் கமிஷனரால் பிரத்தியேகமாக நியமிக்கப்படுவார். அதற்கு பராங்குசம் பிள்ளை எப்படியாகிலும் குற்றவாளி ஒருவனைத் தயாரித்து, சாட்சிகளை ஜோடித்து, அவன் எப்படியும் நியாயஸ்தலத்தில் தண்டனை அடையும்படி செய்து விடுவார். பிறரது கஷ்ட நிஷ்டுரங்கள் எப்படி இருக்குமோவென் பதை அவர் சிறிதும் நினைத்தறியார். அவரது மனத்திலிருந்து வந்த பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசைகள் அபரிமித மாகவும், அபாரமாகவும் இருந்தன. ஆனாலும் அவர் தமது பரிசீலனைக்கு வரும் ஒவ்வொரு வழக்கிலும் தமது மேற்படி ஆசைகளைப் பரிபூரணமாகத் தீர்த்துக் கொண்டார். ஆனாலும், அதனால் அந்த வாதியிடத்திலாகிலும், குற்றவாளியிடத்தி லாகிலும், இரக்கமாவது அபிமானமாவது காட்டுகிறதும் இல்லை. எவருக்கும் சொற்பமாவது அநுகூலம் செய்கிறதும் இல்லை. அவர் எவரிடத்தில் எப்போதும் சிரித்த முகத்தோடும், அன்பாகவும், குழைவாகவும் பேசுவார். அவர் யாருக்காகிலும் பெருத்த தீங்கு செய்ய நினைத்திருந்தால், மற்றவர்களிடத்தில் காட்டுவதை விடப் பதின்மடங்கு அதிகமான அன்பும், அபி மானமும் அவனிடத்தில் காட்டிப் பேசி, அவன் கடைசி வரையில் தன்னை நம்பியிருந்து மோசம் போகும்படி செய்து விடுவார்.

இப்படிப்பட்ட அருமையான பல குணங்கள் வாய்ந்த மகா புண்ணியவானாகிய பராங்குசம் பிள்ளை கண்ணபிரான் அடைபட்டிருந்த அறையின் கம்பிக் கதவிற்கு வெளியில் நின்றபடி ஒரு ஜெவானை அழைத்து ஒரு நாற்காலி கொணர்ந்து போடச் செய்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டவராய், அந்த ஜெவானை அனுப்பி விட்டு கண்ணபிரானை நோக்கி, "என்ன கண்ணபிரான் முதலியாரே! நீர் காலையிலிருந்து தண்ணிர்கூடக் குடிக்காமல் இருக்கிறீராமே! ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? உம்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தை நீர் உண்மையில் செய்தீரோ இல்லையோ அதற்கும் நீர் சாப்பிடுவதற்கும் என்ன சம்பந்தம்? மனிதருக்கு எப்படிப்பட்ட துக்கமோ, துன்டமோ