பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 223

சங்கடங்களோ ஏற்பட்டாலும், யாராவது வயிற்றின் காரியத்தை நிறுத்துவார்களா? அப்போதைக்கு அப்போது தேவையான ஆகாரத்தை சாப்பிட்டு, உடம்பையும், மனசையும் கெடாமல் காப்பாற்றிக்கொள்வது மனிதருடைய முக்கியமான கடமை. சுவரை வைத்துக்கொண்டே சித்திரம் எழுத வேண்டுமென்று ஜனங்கள் சொல்வதுபோல, மனிதருக்கு முதலில் ஆகாரம், அதன் பிறகுதான் விவகாரம். நீர் காலை முதல் இந்நேரம் வரை பட்டினி கிடக்கிறீர் என்று ஒரு ஜெவான் என்னுடைய ஜாகைக்கு வந்து தெரிவித்தவுடனே எனக்கு நிரம்பவும் சங்கட மாகி விட்டது. நான் உடனே புறப்பட்டு வந்தேன். போலீசார் என்றால் நாங்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள் தானே. எங்களுக்கு மாத்திரம் ஈவிரக்கம், பச்சாதாபம் முதலிய குணங்கள் இல்லையா? நீர் அந்தப் பங்களாவில் இருந்தால், இந்நேரம் எவ்வளவோ சிறப்பான விருந்துண்டு கலியாண சந்தோஷத்தில் நிரம்பவும் குதுாகலமாக இருப்பீர் மற்ற எல்லா ஜனங்களும் உம்மைப் பெருமைப்படுத்தி உம்மிடத்தில் வாஞ்சையாக நடப்பதைக் காண்டதே இணையில்லாத ஆனந்தமாக இருக்கும். அதையெல்லாம் அடியோடு கெடுத்து, நாங்கள் உம்மை பிடித்துக் கொண்டு வந்து, இங்கே அடைத்துப் பட்டினி போட்டுக் கொல்லுவது என்றால், அதைவிடப் பரம பாதகமான காரியம் வேறே என்ன இருக்கிறது? காலையில் எத்தனையோ விருந்தா ளிக்கு முன், அப்படிப்பட்ட மங்களகரமான சடங்கு நடக்கை யில் நாங்கள் உம்மைப் பிடித்து வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்தபோது எங்களுக்கு மாத்திரம் மனசில் சங்கடம் ஏற்பட வில்லை என்று நினைத்திரா? என்ன செய்கிறது? எங்களுடைய உத்தியோகம் அப்படிப்பட்டது. வயிற்றுப் பிழைப்புக்காக நாங்கள் இந்தப் போலீசில் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறோம். சர்க்காரார் சொல்லுகிறபடியெல்லாம் நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால், எங்களுடைய உத்தியோகம் போய்விடும். உம்மைப் பிடித்துக் கொண்டு வரும் படி அவசரமான வாரண்டு வந்தது. உமக்குக் கலியாணம் ஏற் பாடு செய்து, இன்றைய தினம் நிச்சய தாம்பூலம் மாற்றப்போகி lர்கள் என்பது எனக்குத் தெரியாது. அந்தப் பங்களாவுக்கு நாங்கள் வந்த பிறகுதான் விஷயம் தெரிய வந்தது. அதற்குமேல்,