பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

செளந்தர கோகிலம்



நான் உம்மைவிட முடியாமல் போய் விட்டது. அங்கே இருந்த ஜனங்கள் எல்லாரும் உண்மையை அறிந்து கொள்ளாமல் நிரம்பவும் பதறித் தாறுமாறாக எங்களை வைதார்கள். இது நாங்களாகச் செய்கிற காரியமும் அல்ல. எங்களுடைய சொந்தக் காரியமும் அல்ல. நாங்கள் சம்பளத்துக்கே வேலை செய்கிற கூலியாள்கள். எங்களை ஜனங்கள் நொந்து கொள்ள நியாயமே இல்லை. அதுபோல நீரும் எங்கள் விஷயத்தில் கொஞ்சமும் நொந்துகொள்ளத் தேவையில்லை. இன்றைய தினம் காலையில் இந்த வாரண்டு என்னிடத்தில் வந்தபோது, நீர் உண்மை யிலேயே இந்தக் குற்றத்தை செய்திருப்பீர் என்றே நான் நினைத் தேன். ஆனால் நான் அந்தப் பங்களாவுக்கு வந்து, உம்முடைய நிலைமையையும், உமக்குப் பெண் கொடுக்கப் போகும் மனிதர்களுடைய யோக்கியதையையும், கண்ணியத்தையும் பார்த்த பிறகும், நீர் உம்முடைய தாயாரிடத்தில் சொன்ன ஆண்மைத்தனமான வார்த்தைகளைக் கேட்ட பிறகும், நீர் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க மாட்டீர் என்ற ஒரு சந்தேகம் உண்டாகிக் கொண்டே இருந்தது. நான் உம்மை இந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிவிட்டு, உம்முடைய நடத் தையைப் பற்றி நீர் உத்தியோகம் செய்யும் ஆபீசிலும், மற்ற சில இடங்களிலும் போய் விசாரித்தேன். நீர் சுத்தமான நடத்தையும், நாணயமும் பெருந்தன்மையும் உடைய மனிதர் என்பது தெரிய வந்தது. அதுவும் தவிர, தற்செயலாக இன்றைய தினம் இந்தத் திருட்டைப் பற்றி வேறே சில அநுமானங்களும் ஏற்பட்டன; இவைகளிலிருந்து இந்தத் திருட்டில் நீர் சம்பந்தப்படவே இல்லை என்பதும், உமக்கு விரோதியான யாரோ சிலர் உம்முடைய வீடு காலியாக இருக்கும் சமயம் பார்த்து, அந்தத் திருட்டுச் சொத்துக்களைக் கொண்டு வைத்திருக்கிறார்கள் என்பதும் என் மனசுக்கு உறுதியாகப் படவே, நான் இன்றைய தினம் முழுதும் இதே வேலையாக அலைந்து கொண்டிருந்தேன். உமக்கு இப்படிப்பட்ட கெடுதல் செய்யக்கூடிய விரோதி யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற அவாவோடு நான் இறைய தினம் முழுதும் பல இடங்களுக்குப் போய் அலைந்து விட்டு இப்போதுதான் வந்து சேர்ந்தேன். உடனே ஜெவான் வந்து உம்முடைய பரிதாபகரமான நிலைமையைப் பற்றிச்