பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 227

கொடுக்கிறது. ஆகையால், அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு நாம் உம்மை நாளைய தினம் காலை 10 மணி வரையில் இங்கே வைக்க ஏற்பாடு செய்தேன். நீர் அந்த ஜெயிலுக்குப் போய் விட்டால், உமக்கு ஜெயிலின் சாப்பாடுதான் கிடைக்கும். நீர் உங்களுடைய மனிதர்களை வரவழைத்துப் பார்க்க வேண்டுமா னாலும் அதற்கு மாஜிஸ்திரேட்டின் உத்தரவு கிடைக்க வேண்டும். நீர் இங்கே இருந்தால் உம்முடைய பிரியமான ஆகா ரத்தைச் சாப்பிடலாம். உம்முடைய சொந்த மனிதர்களோடு பேச வேண்டுமானாலும், அதற்கு நான் சுலபமாக அனுமதி கொடுத்து விடலாம். இதையெல்லாம் உத்தேசித்தே நான் உம்மை இங்கே வைக்கச் செய்தேன். ஏனென்றால், இன்று காலையில் நான் அந்தப் பங்களாவில் வந்திருந்து உங்களுடைய பெருந்தன்மையைக் கண்டு, நீர் குற்றமற்றவர் என்பதை அறிந்து கொண்ட பிறகு நான் உம்மை விட்டு விட அதிகாரம் இல்லாத வனாக இருந்தாலும், என்னாலான இந்த அற்ப உதவியையாவது உமக்குச் செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தினால் நான் உம்மை இங்கே வைக்கச் செய்தேன். நீர் அங்கே போன பிறகு சாப்பாட்டு விஷயத்தில் உம்முடைய பிரியம் போல நடந்து கொள்ளும். இங்கே இருக்கிற வரையில் பட்டினி கிடக்காமல் சாப்பிட்டு சுகமாகப் படுத்துக் கொள்ளும். சுத்த சைவனான ஒரு ஜெவானை அனுப்பி சோற்றுக் கடையிலிருந்து உமக்கு ஆகாரம் தருவித்திருக்கிறேன். இன்றைய தினம் ராத்திரிக்கு உமக்கு வேண்டிய படுக்கைக்கும், வசதி செய்து கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். அதுவும் தவிர, நாளைய தினம் காலையில், பத்து மணிக்குள் நீர் யாரையாவது வரவழைத்துப் பேசி உம்முடைய கட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வக்கீலையும் அமர்த்திக்கொள்ளும். அந்த வக்கீல் வேண்டு மானால் இங்கே வந்து உம்மோடு பேச நான் அனுமதி கொடுக் கிறேன். அவர் இப்போதே ஒரு மனு எழுதிக் கொண்டு மாஜிஸ் திரேட்டினிடத்திற்குப் போய் உம்மை ஜாமீனில் விடும்படி கேட்டு வாதாடி முயன்று பார்த்தால் மாஜிஸ்டிரேட் உம்மை ஜாமினில் விட்டு விடுவார். நாளைய தினம் காலையில் நீர் ஜெயிலுக்குப் போகும் துன்பத்துக்கும் அவமானத்துக்கும் ஆளாகாமல் இங்கே இருந்தபடியே வீட்டுக்குப் போய்விடலாம்.