பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

செளந்தர கோகிலம்



அதற்கு மேலும் இந்த விசாரணை நடக்கும்போதும் எங்களால் உமக்கு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்யத் தடையில்லை” என்று அந்தரங்கமான அபிமானத்தோடு கூறினார். *

அதைக்கேட்ட கண்ணபிரான் அந்த இன்ஸ்பெக்டர் உண்மையிலேயே இளகிய மனதுடைய புண்ணியவான் என்றும், துஷ்டர்களுக்கும் கொடியவர்களுக்கும் இருப்பிடமான போலீஸ் இலாகாவில் அப்படிப்பட்ட நல்ல மனிதர் இருந்தது அபூர்வம் என்றும் நினைத்து மட்டுக்கடங்கா மகிழ்ச்சியும், உற்சாகமும் நம்பிக்கையும் அடைந்தவனாய், நன்றி விசுவாசத்தின் பெருக்கினால் இளகி மலர்ந்த முகத்தினனாய் அவரை நோக்கி, 'அடடா இந்த ஆபத்துச் சமயத்தில் இவ்வளவு தூரம் யார் உதவி செய்யப் போகிறார்கள் என் விஷயத்தில் தாங்கள் செய்யும் இந்த நன்மை ஒரு நாளும் மறக்கத்தக்கதல்ல. தாங்கள் சொல் லுகிற யோசனைப்படியே நான் நடந்து கொள்ளுகிறேன். இன்றையதினம் காலையில் தாங்கள் வந்திருந்து பங்களாவில் என்னுடைய தாயார் இருக்கிறார்கள். அவர்களுடைய பெயர் கற்பகவல்லியம்மாள். தாங்கள் யாரையாவது ஒர் ஆளை உடனே அந்தப் பங்களாவுக்கு அனுப்பி அவர்களை மாத்திரம் ஒரு வண்டியில் வைத்து இங்கே அழைத்துக்கொண்டு வந்தால் நாங்கள் இருவரும் கலந்து பேசி உடனே வக்கீலை வரவழைத்து அவரைக் கண்டு மற்ற முயற்சிகளைச் செய்கிறோம்” என்றான்.

அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர், "அப்படியே செய்யலாம். நான் போய் உடனே ஒரு ஜெவானை பைசைகிலில் வைத்து அனுப்பி உம்முடைய தாயாரை அழைத்துக்கொண்டு வரச் செய் கிறேன்; அதோடு உமக்கும் ஆகாரம் அனுப்புகிறேன். உம்மு டைய தாயார் வருவதற்குள் நீர் உம்முடைய போஜனத்தை முடித்துக் கொள்ளும். நான் ஜெவானை அனுப்பிவிட்டு மறுபடி யும் வருகிறேன்' என்று கூறிவிட்டு எழுந்து அப்பால் போய் விட்டார்.

அதன் பிறகு கால் நாழிகை நேரம் சென்றது. இரண்டு ஜெவான்கள் தட்டிலும் பாத்திரங்களிலும் ஆகாரம் தண்ணீர் முதலியவற்றைக் கொணர்ந்து, சிறைச்சாலையின் கதவிலிருந்து