பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 229

பூட்டை விலக்கிக் கதவைத் திறந்து இவைகளை உள்ளே வைத்து, கண்ணபிரானை உட்காரவைத்து இலை போட்டுப் பரிமாறி அவனை உண்பித்தனர். இன்ஸ்பெக்டர் கூறிய அனுதாப மொழி களைக் கேட்டுக் கண்ணபிரான் ஒருவாறு துணிபடைந்து இருந் தான். ஆனாலும், அவனுக்கு ஆகாரத்தின் மீதே மனம் செல்லா திருந்தது. ஆனாலும், தனக்குப் பேருபகாரியாகத் தோன்றியுள்ள அந்த இன்ஸ்பெக்டரது சொல்லைத் தான் மீறக் கூடாது என்ற எண்ணத்தினால் தூண்டப்பட்டவனாய், அவன் சொற்பமாகத் தனது போஜனத்தை முடித்துக் கொண்டான். அவனுக்கு ஆகாரம் கொணர்ந்த ஜெவான்கள் இருவரும், மிகுதியிருந்த ஆகாரங்களோடு பாத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இரும்புக் கம்பிக் கதவை மறுபடியும் மூடிப் பூட்டிக்கொண்டு அப்பால் போய்விட்டனர்.

கண்ணபிரான் காலை முதல் பட்டினி கிடந்து உண்ட அயர்வினால் தளர்வடைந்து கீழே உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டிருந்தான். அவ்வாறு கால்நாழிகை நேரம் கழிந்தது. மறுபடியும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை அங்கே வந்து, வெளியில் கிடந்த நாற்காலியின் மீது உட்கார்ந்து கொண்டார்.

அவர் வந்ததைக் கண்ட கண்ணபிரான் அவருக்கு முன்பு தான் உட்கார்ந்திருக்கக் கூடாது என்ற நினைவைக் கொண்ட வனாய் சடக்கென்று எழுந்திருக்க முயன்றான். அதைக்கண்ட இன்ஸ்பெக்டர் நிரம்பவும் அன்பாக அவனை நோக்கி, "பரவாயில்லை. உட்காரும் ஏன் எழுந்திருக்கிறீர்? உட்கார்ந்து கொண்டே பேசும்; இந்த இடத்தில் நீர் எனக்கு மரியாதை கூட செய்ய வேண்டுமா? அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. நீர் காலையிலிருந்து பட்டினி கிடந்து அலுத்துப் போயிருக்கிறீர். நீர் எழுந்து நிற்பதனால், நான் போய்விட்டு அரைநாழிகை நேரம் கழித்தாலும் வருகிறேன்' என்று நிரம்பவும் உரிமையாகவும் உருக்கமாகவும் பேசினார்.

அதைக்கேட்ட கண்ணபிரான் அவரது மனதை வருத்த விரும்பாதவனாய் முன்போலவே உட்கார்ந்து கொண்டான். உடனே இன்ஸ்பெக்டர் அவனை நோக்கி, ‘பைசைகிலில்