பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 231

சம்சாரம் சாதாரண நிலைமையில் இருப்பவரும், நற்குண நல்லொழுக்கம் உடையவருமான பிள்ளையாகப் பார்த்துத் தம்முடைய பெண்களைக் கட்டிக் கொடுக்க நினைத்திருந் தார்கள்; ஆனால் மூத்த பெண் மாத்திரம் அதற்கு இணங்கினாள். இரண்டாவது பெண் பணக்காரருடைய வீட்டிலேதான் வாழ்க்கைப் படுவேன் என்று ஒரே பிடிவாதமாகச் சொல்லி விட்டாள். அந்தச் சமயத்தில் சில தினங்களுக்கு முன், இந்த இரண்டு பெண்களும் ஸாரட்டில் ஏறிக் கொண்டு சமுத்திரக் கரையில் காற்று வாங்குவதற்காகப் போய்க் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் நான் என்னுடைய கச்சேரியில் இருந்து புறப்பட்டு வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது எதிரில் வந்த ஒரு மோட்டார் வண்டி அவர்களுடைய ஸ்ாரட் டின் சக்கரங்களில் உராய்ந்து, அவைகளை முறித்துவிட்டுக் குதிரையின் காலில் ஒரு பக்கத்தையும் செதுக்கிக் கொண்டு போய்விட்டது. ஸாரட்டு வண்டி ஒரு பக்கத்தில் சாய்ந்து விட்டது. குதிரை தனது காலில் ஏற்பட்ட காயத்தின் நோவைப் பொறுக்காமல் தாண்டிக் குதித்து சாய்ந்துபோன ஸ்ாரட்டை இழுத்துக்கொண்டு, பெருத்த பள்ளத்துக்குப் பக்கத்தில் ஒடியது. அந்தப் பெண்கள் இருவரும் வண்டிக் கூண்டிற்குள் தொற்றிக்கொண்டு இழுபடுகிறார்கள். அடுத்த நிமிஷத்தில் வண்டி பள்ளத்தில் விழுந்துவிடும்போல இருந்தது. அப்போது நெடுந்துாரத்தில் ஜனங்கள் வந்து கொண்டிருந்தார்கள். நான் ஒருவனே பக்கத்தில் இருந்தவன். நான் உடனே பாய்ந்து குதிரையைப் பிடித்துப் பாட்டையில் திருப்பி, கையிலிருந்த பேனாக்கத்தியினால், அதன் வார்களை அறுத்து அதை வேறாக்கி, வண்டியில் இருந்தவர்களுடைய உயிரைக் காப்பாற்றினேன். அதன் பிறகு நான் உடனே திருவல்லிக்கேணிக்கு ஒடி அவர்க ளுக்காக ஒரு குதிரை வண்டி அமர்த்திக் கொண்டு வந்து, அதன் மூலமாக, அவர்களை அவர்களுடைய பங்களாவில் கொண்டு போய்ச் சேர்த்தேன். அதிலிருந்துதான் அவர்களுக்கும் எங்க ளுக்கும் பழக்கம் உண்டாயிற்று. அன்றைய தினம் என்னைப் பார்த்து என்னுடைய குணத்தை அறிந்துகொண்ட மூத்தபெண் என்னைக் கட்டிக்கொள்ளப் பிரியப்பட்டு, அதைத் தன்னுடைய தாயாரிடத்தில் வெளியிட்டாளாம். அந்த அம்மாள் மறுநாள்