பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

செளந்தர கோகிலம்



காலையில் எங்களுடைய வீட்டுக்கு வந்து எங்களை அழைத்து வந்து எங்களுக்கு விருந்து வைத்து, என்னுடைய தாயாரோடு கலந்து யோசனை செய்து, இந்தக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்து இன்றைய தினம் நிச்சய தாம்பூலம் மாற்ற முடிவு செய்தி ருந்தார்கள். அதற்குள் இப்படிப்பட்ட எதிர்பாராத பழி என் பேரில் வந்து சேர்ந்தது.

இன்ஸ்பெக்டர் :- (நிரம்பவும் கலங்கி வருந்தியவராய்) அப்படியா சங்கதி! நீர் சொன்ன வரலாறு திருப்திகரமாகத்தான் இருக்கிறது. நீங்கள் பரம ஏழையாயிற்றே: கோடீஸ்வரர்களான அவர்கள் தங்களுடைய பெண்ணை உமக்குக் கொடுக்க எப்படி இணங்கியிருப்பார்கள் என்றும், ஒருவேளை நீரும் பணக்காரர் என்று நடித்து அவர்களை மோசம் செய்து பெண்ணைக் கட்டிக் கொள்ள முயற்சி செய்திருப்பீரோ என்றும் சிலர் சந்தேகித்து என்னிடத்தில் சொன்னதன்றி, அப்படிப்பட்ட மோசக்கருத்தில் இறங்கக் கூடிய நீர் அந்தத் தபால் திருட்டையும் ஏன் நடத்தி இருக்கலாகாது என்ற கேள்வியையும் என்னிடத்தில் கேட்டனர். அந்த சம்சயத்தை மனசில் வைத்துக் கொண்டே நான் உம்மி டத்தில் இப்போது இந்தக் கேள்வியைக் கேட்டேன். நீர் சொன்ன சமாதானம் சரியானதாகவும், எவரும் ஒப்புக் கொள் ளக்கூடியதாகவும் இருக்கிறது. இந்தத் தபால் திருட்டை நீர் செய்திருக்க மாட்டீர் என்று முன்னிலும் அதிகமாக இப்போது உறுதிப்படுகிறது. அதிருக்கட்டும், இன்னொரு விஷயம். நீங்களோ ஏழை: இந்த வழக்கை நடத்த பிரபலமான ஒரு வக்கீலை அமர்த்தவும் மற்ற விஷயங்களுக்கும் நீங்கள் ஏராள மான பணத்தொகை செலவு செய்ய நேருமே. துபாஷ் முதலியா ருடைய வீட்டார் இந்த விஷயத்தில் உமக்கு ஏதாவது பண உதவி செய்வார்களா உமக்கு நேர்ந்த இந்தத் துன்பத்தை அவர்கள் பெருத்த இழிவாகக் கருதி உம்முடைய சம்பந்தம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களா? அல்லது, அந்தப் பெண் உம்மிடத்தில் வைத்திருக்கும் ஆழ்ந்த பிரியத்தைக் கருதி, உம்மைக் கைவிடாமல், இந்தச் சமயத்தில் உமக்குப் பண உதவி செய்து, நீர் தப்பிவந்த பிறகும் உமக்கே அந்தப் பெண்ணைக் கொடுப்பார்களா? அன்றைய தினம் கடற்கரையில் நீர் இந்த மூத்த பெண்ணைப் பார்த்ததாகச் சொன்னீரே; அதன்பிறகு,