பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 235

கடவுள்தான். இவைகளின் உள்கருத்து இன்னதென்று நான் எப்படி கண்டுபிடிக்கிறது? எனக்குக் கலியாணம்தான் கை கூடுமோ, அல்லது காராக்கிரப்பிரவேசந்தான் கைகூடுமோ? அது காலக்கிரமத்திலேதான் தெரியவேண்டும்.

இன்ஸ்பெக்டர் : (அன்பாகக் கடிந்து) அப்படி ஒன்றும் கெடுதல் நடக்காது; எல்லாம் முடிவில் நல்லதாகத்தான் இருக்கும்; அதைப்பற்றி சந்தேகமில்லை. புரசைப் பாக்கத்துக்குப் போன ஜெவான் வரவேண்டிய நேரம் ஆகிவிட்டது. அவன் ஒருவேளை வந்திருக்கிறானோ என்று பார்த்துவிட்டு வருகிறேன் - என்று கூறிவிட்டு நாற்காலியை விட்டெழுந்து அப்பால் சென்றார்.

தனியாக விடப்பட்ட கண்ணபிரான், புரசைபாக்கத்திற்குப் போன ஜெவான் தனது தாயை அழைத்துக்கொண்டு வருவான் என்றும், தான் அவளை இன்னம் சில நிமிஷங்களில் காணலாம் என்றும் நினைத்து மிகுந்த ஆவலும் சஞ்சலமும் கொண்டவனாய் எழுந்து அந்த அறையில் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தான்.

அவ்விடத்தை விட்டுப்போன இன்ஸ்பெக்டர் மறுபடியும் அங்கே வந்து நாற்காலியின்மேல் உட்கார்ந்தவராய் அவனை ந்ோக்கி, "ஜெவான் போய் நிரம்ப நேரமாகிறது, இன்னமும் வராத காரணம் தெரியவில்லை. உம்முடைய தாயார் ஒரு வேளை அந்தப் பங்களாவில் இல்லையோ, அல்லது அவர்களை அழைத்துவர வண்டிதான் கிடைக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை. அவன் உம்முடைய தாயாரை அழைத்து வந்தால் உடனே இங்கே அனுப்பும்படி சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்” என்றார். -

அவர் பேசி வாய்மூடுமுன் ஒரு ஜெவான் ஓடிவந்து, 'புரசைப்பாக்கம் போனவன் இப்போதுதான் வந்தான்; அவனோடுகூட வேறே யாரும் வரவில்லை” என்றான்.

அதைக்கேட்டு வியப்புற்றவராகத் தோன்றிய இன்ஸ் பெக்டர், “அவன் தனியாகவா வந்திருக்கிறான்! ஒருவேளை வண்டி பின்னால் வருகிறதோ என்னவோ? எல்லாவற்றிற்கும் அவனையே இங்கே அனுப்பு” என்று கூறினார்.