பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

செளந்தர கோகிலம்



உடனே அந்த ஜெவான் அப்பால் செல்ல, வேறோரு ஜெவான் பைசைகிலை உருட்டிக்கொண்டு உள்ளே வந்து அவருக்கு எதிரில் விறைப்பாக நின்று சலாம் செய்தான்.

அவனைக்கண்ட இன்ஸ்பெக்டர் கம்பீரமாக நிமிர்ந்து, அதிகாரமாக அவனைப்பார்த்து, "என்னடா கோவிந்தசாமீ! அம்மா வருகிறார்களா?” என்று வினவினார்.

கோவிந்தசாமி : இல்லை எஜமானே! நாம் காலையிலே போய் இவரைப் பிடித்தோமே! அந்தப் பங்களாவுக்குள்ளே நான் போனேன். வேலைக்காரர்கள் மாத்திரம் சிலர் இருந்தார்கள். கலியானத்துக்காக வந்து கூடியிருந்த ஜனங்களில் ஒருவர்கூட மிஞ்சாமல் எல்லோரும் அவரவர்களுடைய வீட்டுக்குப் போய்விட்டார்கள். கொட்டகைப்பந்தல் முதலிய மற்ற எல்லா அலங்காரங்களும் அப்படியே இருக்கின்றன. ஆனால், மனிதர் இல்லாமல் இருப்பது நிரம்பவும் துக்ககரமாக இருக்கிறது. ஒரு மூலையில் துயரமே வடிவாக ஒடுங்கி உட்கார்ந்திருந்த வேலைக்காரர்கள் என்னைக் கண்டவுடனே இன்னமும் யாரை யாவது பிடித்துக்கொண்டுபோக நான் வந்திருக்கிறேனோ, அல்லது வேறே புதிய தீங்கு எதையாவது செய்ய வந்திருக்கி றேனோ, என்று பயந்து நடுங்கி ஒளிந்துகொள்ளத் தலைப்பட் டனர். அவர்களிடத்தில் நான் நயமாகவும் அன்பாகவும் பேசி, நான் சர்க்கார் வேலையாக வரவில்லை என்றும், கண்ணபிரான் முதலியார் அவருடைய தாயாருக்குச் செய்தி சொல்லும்படி என்னை அனுப்பி இருக்கிறார் என்றும் அவர்களைத் தைரியப் படுத்தினேன். கண்ணபிரான் முதலியாருடைய தாயாரும் மாமியாரும் இன்றைய தினம் காலையிலிருந்து படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் ஒரே மயக்கமாக விழுந்து கிடக்கிற தாகவும், டாக்டர் வந்து மருந்து கொடுத்துவிட்டுப் போயிருக்கிற தாகவும், பெண்கள் இரண்டுபேரும் விசனப்பட்டுக்கொண்டு படுத்திருப்பதாகவும், அவசியமானால் என்னை மூத்த பெண் இருந்த இடத்தில் கொண்டுபோய்விடுவதாகவும் அந்த வேலைக் காரர்கள் சொன்னார்கள். நான் அதற்கு இணங்கி அவர்களோடு கூடப் போனேன். கலியாணப்பெண் அழுதுகொண்டே படுத்திருந்த ஒர் அறைக்குள் அவர்கள் என்னைக் கொண்டுபோய்