பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

செளந்தர கோகிலம்



நிலைமையில் கிடக்கிறார்கள் என்பதைக் கேட்டவுடனே கண்ணபிரான் கரைகடந்த துயரத்திலும் சஞ்சலத்திலும் ஆழ்ந்து, தான் என்ன செய்வது என்பதை அறியாதவனாய்த் தத்தளிக்கலா னான். அவனது உயிர் தாமரை இலைத் தண்ணிர்போலத் தவித்தது. ஸ்மரணை தப்பிக்கிடந்த இருவருக்கும் உதவியாக இருக்கும் கோகிலாம்பாளை அவ்விடத்திலிருந்து வரவழைப் பதைவிட, தான் ஜெயிலில் கிடப்பதே அந்த ஆபத்துச் சமயத்தில் தான் செய்யக்கூடிய காரியம் என்று கண்ணபிரான் நினைத்தான். இருந்தாலும், தனது தாய் ஒருவேளை இறந்து விடுவாளானால் தான் அவளைப் பார்க்கக் கூடாமல் போய்விடுமே என்ற நினை வும் தோன்றி வருத்தியது, ஆகையால், தான் ஜாமீனின்மேல் விடைபெற்று அந்த அபாய காலத்தில் தனது தாய்க்கு அருகில் இருப்பதே உத்தமமாகத் தோன்றியது. தனது தாய் மரிக்க நேரு மானால், அவள் தன்னைப்பார்க்க ஆசைப்பட்டுக்கொண்டே இருந்தால், அவளது ஜென்மம் கடைத்தேறாமல் போய்விடுமே என்ற நினைவும் அவனைத் துாண்ட ஆரம்பித்தது.

அவ்வாறு, கண்ணபிரான் கோகிலாம்பாளை வரவழைக்க லாமா வேண்டாமா என்ற விஷயத்தைப்பற்றி யோசித்து யோசித்து எவ்வித முடிவிற்கும் வரமாட்டாமல் நிரம்பவும் தத்தளித்துத் தவித்திருக்க, அதுவரையில் ஆழ்ந்த சிந்தனை செய்பவர்போலத் தோன்றிய இன்ஸ்பெக்டர் கண்ணபிரானை நோக்கி, "என்ன முதலியாரே இந்த ஜெவான் வந்து சொன்ன சங்கதியைக்கேட்க, எனக்கு நிரம்பவும் விஸ்னமாக இருக்கிறது. இன்றைய தினம் காலையில் அந்தப் பங்களா இருந்த கோலாகலக் காட்சியென்ன இப்போது இருக்கும் கோரமான காட்சியென்ன சே. சே என்ன போலீஸ் உத்தியோகம், நாங்கள் செய்த ஒரு காரியத்தின் பலனாகத்தானே இப்படிப்பட்ட கொடுமை நடந்து விட்டது. இப்படிப்பட்ட மகா துக்ககரமான விஷயங்களை எல்லாம் அநுபவத்தில் பார்க்கப் பார்க்க அதிக சீக்கிரத்தில் இந்தப் போலீஸ் வேலையை உதைத்துத் தள்ளிவிட்டு எங்கேயா வது போய், rவரம் செய்தாவது பிழைக்கலாமா என்ற மனக் கொதிப்பும் ஆவேசமும் உண்டாகின்றன. உம்முடைய தாயார் சுய உணர்வோடு இருந்தால் நாங்களாவதுபோய் அந்த அம்மாளிடத் தில் விஷயங்களைச் சொல்லி, ஒரு வக்கீலை அந்த இடத்துக்கே