பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

செளந்தர கோகிலம்



என்று எழுதி முடிக்கப்பட்ட கடிதத்தை கண்ணபிரான் ஒரு தரம் படித்துப் பார்த்த பிறகு மடித்து ஒர் உறைக்குள் போட்டு ஒட்டி, மேல் விலாசம் எழுதி இன்ஸ்பெக்டரிடத்தில் வணக்க மாகக் கொடுக்க, அவர் அதை வாங்கி பைசைகிலோடு வந்த ஜெவானை அழைத்து அவனிடத்தில் அந்தக் கடிதத்தைக் கொடுத்து, "அடேய் கோவிந்தசாமீ. இந்தக் கடிதத்தை ஜாக் கிரதையாக எடுத்துக் கொண்டு நீ உடனே புரசைப்பாக்கத்தி லுள்ள ராஜரத்தின முதலியாருடைய பங்களாவுக்குப் போய், உன்னோடு பேசிய கலியாணப் பெண்ணிடத்தில் இதைக் கொடு; அந்த அம்மாள் படித்துப் பார்க்கட்டும்; நாளைய தினம் காலையில் அந்த அம்மாள் வருகிறதாகச் சொன்னால், எத்தனை மணிக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு நீ உன் வீட்டுக்குப் போய் படுத்துக் கொள். நாளைக்குக் காலையில் அந்த நேரத்துக்கு நீ அங்கே போயிருந்து, அவர்களைப் பெட்டி வண்டியில் வைத்து ஜாக்கிரதையாக இங்கே அழைத்துக் கொண்டு வந்து எவரும் அந்த அம்மாளைப் பார்க்காதபடி உள்ளே அழைத்துக் கொண்டு வந்து சேர். தெரிகிறதா? அந்த அம்மாள் வரச் செளகரியப்படாது என்று சொன்னால், நீ உடனே வந்து அந்தச் சங்கதியை இவரிடத்திலும் என்னிடத்திலும் தெரி வித்து விட்டு, அதன் பிறகு உன்னுடைய வீட்டுக்குப் போ, ஒரு வேளை அந்த அம்மா வரக்கூடாமல் வேறே யாரையாவது அனுப்பினால், அவரையும் முன் சொன்னபடியே பெட்டி வண்டியில் வைத்து இங்கே அழைத்துக் கொண்டு வந்து விடு; இவர்கள் பேசி முடித்த பிறகு, அந்த அம்மாளையாவது, அல்லது அந்த அம்மாளால் அனுப்பப்படும் வேறே மனிதரையாவது நீ திரும்பவும் பத்திரமாக அவர்களுடைய ஜாகையில் கொண்டு போய்ச் சேர்த்துவிடவேண்டியது. ஏதாவது தாறுமாறாக நடந்து கொள்ளப் போகிறாய்; ஜாக்கிரதை, இனி நீ போகலாம்” என்று கண்டிப்பாகவும் அதிகார தோரணையாகவும் கூற, அவரது வார்த்தைகளையெல்லாம் நிரம்பவும் கவனமாகக் கேட்டுக் கொண்ட ஜெவான் அப்படியே நடந்து கொள்வதாகச் சொல்லி அவருக்குச் சலாம் வைத்துவிட்டு சைகில் வண்டியை உருட்டிக் கொண்டு வெளியில் போய்விட்டான்.