பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 245

உடனே இன்ஸ்பெக்டர் தமது ஆசனத்தை விட்டு எழுந்து, கண்ணபிரானிடத்தில் நிரம்பவும் அன்பாகவும், குழைவாகவும் பேசத் தொடங்கி, "ஐயா! முதலியாரே! நீர் செளகரியமாகப் படுத்துக் கொண்டு நன்றாகத் தூங்கும். உமக்கு இனி கவலையே வேண்டாம். நான் அவசரமாக வேறொரு ஸ்டேஷனுக்குப் போக வேண்டும். இந்த ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் இதோ பக்கத்து அறையில் இருக்கிறார். அவரிடத்தில் நான் இந்த விவரங்களை எல்லாம் சொல்லிவிட்டு, உமக்கு ஆக வேண்டிய உதவிகளை எல்லாம் செய்யும்படி உத்தரம் செய்து விட்டுப் போகிறேன். நாளைய தினம் உம்முடைய சம்சாரம் இங்கே வந்து போன உடனே உமக்காக நியமிக்கப்படும் வக்கீல் வந்தால் தடை சொல்லாமல் அவரையும் இங்கே விடும்படியாகவும் நான் அவரிடத்தில் சொல்வதன்றி, உம்மை நாளைய தினம் மத்தி யானம் வரையில் இங்கேயே வைத்திருக்கும்படி செய்கிறேன். அதற்குள் வக்கீல் மாஜிஸ்திரேட்டினிடத்தில் வாதாடி உம்மை ஜாமீனில் விடுவித்து விடுவார். ஒரு வேளை நானும் நாளை தினம் காலையில் இங்கே வந்தாலும் வருவேன். நான் வரா விட்டாலும் அதைப்பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். உமக்கு என்னென்ன அநுகூலங்கள் தேவையோ அவைகளையெல்லாம் சப் இன்ஸ்பெக்டர் செய்து கொடுப்பார் எனக்கு நேரமாகிறது. நான் போய்விட்டு வருகிறேன்!” என்று அந்தரங்க விசுவாசத் தோடு கூறிவிட்டு அப்பால் போய்விட்டார். அங்கே நின்ற ஒரு ஜெவான் கண்ணபிரான உள்ளே அனுப்பி விட்டு இரும்புக் கம்பிக் கதவுகளை மூடிப் பூட்டுகளைப் பூட்டிக்கொண்டு அப் பால் போய்விட்டான். சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்ட கண்ணபிரான் தனக்காகக் கொடுக்கப்பட்ட படுக்கையை விரித்து அதன்மேல் சயனித்தவனாய் மறுநாள் காலையில் கோகிலாம் பாள் அங்கே வருவாள் என்றும், தான் குற்றவாளியல்ல என்று அவள் மனம் திருப்தியடையும்படி தான் நன்றாக அவளுக்கு உறுதி கூற வேண்டும் என்றும், அவள் மூலமாக ஒரு வக்கீலை வரவழைத்து வாதாடச் செய்து, ஜாமீனில் விடுதலை பெற்று, பங்களாவிற்குப் போய்த் தனது தாய்க்குத் தேவையான சிகிச்சைகளை எல்லாம் செய்து அவளைக் காப்பாற்றித் தேற்ற வேண்டுமென்றும், வேறு பலவாறாகவும் நினைத்து இன்பக்