பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

செளந்தர கோகிலம்



கனவு கண்டு நெடுநேரம் வரையில் துயிலாமல் விழித்தபடியே படுத்துக் கொண்டிருந்தான்.

அவனது நிலைமை அங்ங்ணமிருக்க, அவனிடத்திலிருந்து புறப்பட்ட இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை பக்கத்தில் அறையிலிருந்த சப் இன்ஸ்பெக்டரிடம் போய், "ஒய் சப் இன்ஸ்பெக்டர் நான் எவ்வளவோ தந்திரம் செய்து பார்த்தேன். இவனிடத்திலிருந்து உண்மையைக் கிரகிக்க முடியவில்லை. இவனைப் பார்ப்பதற்கு இப்போதாவது நாளைய தினம் காலையி லாவது யாராவது வந்தால் அவர்களை உள்ளே விட வேண் டாம். இவனைக் காலை 8 மணிக்கே அழைத்துக் கொண்டு போய் ஜெயிலில் சேர்த்து விடுங்கள். கொஞ்சமும் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறிவிட்டு அந்த ஸ்டேஷனை விட்டு வெளியிற் சென்றார். ஸ்டேஷனுக்கு வெளியில் சிறிது துரத்திற்கு அப்பால் பைசைகிலோடு நின்று கொண்டிருந்த ஜெவான் கோவிந்தசாமியைக் கண்டு, அடேய் கோவிந்தசாமி! நான் கண்ணபிரானிடத்தில் பேசிய விஷயமாவது, கடிதம் எழுதி வாங்கிய விஷயமாவது சப் இன்ஸ்பெக்டருக்கும், மற்ற ஜெவான்களுக்கும் தெரிந்திருக்குமா?’ என்றான்.

கோவிந்தசாமி :- அதெல்லாம் ஒன்றும் தெரியாது. நல்ல சாப்பாடு, படுக்கை முதலிய வசதிகளையெல்லாம் செய்து கொடுக்கும்படி நான் சொன்னதைத்தான் அவர்கள் அறிந்து கொண்டு அப்படியே செய்தார்கள். நாம் செய்த தந்திரத்தை எல்லாம் அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. .

இன்ஸ்பெக்டர் :- சரி, நல்லதாயிற்று, நீ இந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு அந்தப் பங்களாவுக்கு இப்போதே போக வேண்டாம். பொழுது விடிந்தவுடனே போய், அந்தப் பெண்ணி னிடத்தில் கடிதத்தைக் கொடுத்து, நிரம்பவும் சாமார்த்திய மாகவும், அவள் சந்தேகப்படாத படியும் அவளைப் பெட்டி வண்டிக்குள் அழைத்துக் கொண்டு வந்து சேர். நீ போலீஸ் உடுப்புகளைப் போட்டுக் கொண்டு போக வேண்டாம்; அவளை வண்டியில் வைத்து அழைத்துக் கொண்டு வரும்போது, அவள் சந்தேகப்படாமல் இருக்கும்படி அவளுடைய வண்டிக்காரனே வண்டியை ஒட்டிக்கொண்டு வரும்படி செய். நீயும் அவனோடே