பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 247

உட்கார்ந்து கொண்டுவா. வழியில் ஆனைகெவுனியண்டை வண்டி வரும்போது அங்கே நடைப்பாதையில் பராக் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஜெவான், அந்த வண்டியை, நீங்கள் தப்பான பக்கத்தில் ஒட்டினர்கள் என்று உங்களைப் பிடித்துக் கொள்ளும்படி, நான் போய் இப்போதே ஏற்பாடு செய்து விட்டுப் போகிறேன். அந்த ஜெவான் வண்டிக்காரனை மட்டும் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போகும்படி செய்கிறேன். அந்தச் சமயத்தில் நீ பெட்டி வண்டியை விசையாக ஒட்டிக் கொண்டு நாம் தயாரித்து வைத்திருக்கும் ரகஸியமான இடத்துக்கு வந்து சேர். அவள் வண்டியை விட்டு இறங்கின உடனே கண்ணபிரான் முதலியார் உள்ளே ஓர் அறையில் இருக் கிறார் என்று அவளிடத்தில் தந்திரமாகச் சொல்லி, அவள் சந்தேகப்படாதபடி அவளை உள்ளே கொண்டு வந்து விட்டு விடு. மற்ற விஷயங்களை எல்லாம் நான் பார்த்துக் கொள்கி றேன். தெரிகிறதா?’ என்றார்.

கோவிந்தசாமி, "ஓ! தெரிகிறது. அப்படியே செய்து விடு கிறேன்” என்று கூறி இன்ஸ்பெக்டரிடத்தில் பைசைகிலைக் கொடுத்துவிட்டு அவரிடத்தில் உத்தரவு பெற்றுக் கொண்டு போய்விட்டான். இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை அவனால் கொடுக்கப்பட்ட பைசைகில் வண்டியில் ஏறிக்கொண்டு ஆனை கவுனி போலீஸ் ஸ்டேஷனை நோக்கிச் செல்லலானார். அவரது மனம் நிறைய கோகிலாம்பாளின் தேஜோ மயமான அற்புத வடிவமே நிறைந்து தாண்டவமாடியது. மறுநாட் காலையில் அந்த வடிவழகி மீளாதபடி தமது வலைக்குள் வந்து வீழ்ந்து விடுவாள் என்றும், அப்போது தாம் தமது மனோ விகாரத்தை நிவர்த்தித்துக்கொள்ளலாம் என்றும் நினைத்து மானளபீகக் கோட்டை கட்டிக்கொண்டவராய், போய்க் கொண்டிருந்தார்.