பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 249

அவன்மீது சுமத்தி இருக்கிறார்கள் என்றும், நியாயாதிபதி யினிடம் உண்மை எப்படியும் வெளியாகிவிடும் ஆதலால், அவன் அதிசீக்கிரத்தில் விடுதலை அடைந்து திரும்பி வந்து விடுவான் என்றும் ஜனங்களுள் பெரும்பாலோர் நினைத்து ஒருவரோடு ஒருவர் அங்கலாய்த்துக் கொண்டனர். வேறு சிலர்: 'உண்மை இன்னதென்பது ஈசுவரனுக்கும் கண்ணபிரானுக் கும்தான் தெரியவேண்டும்; ஆனால் இதில் ஒரு விஷயமிருக் கிறது. நெருப்பில்லாமல் புகை உண்டாகாது என்று ஒரு வசனம் சொல்வதுண்டு; அதுபோல, இதில் கொஞ்சமாவது இந்தக் கண்ணபிரான் சம்பந்தப்பட்டிராவிட்டால், போலீசார் அபாண் டமாக இவனைப் பிடித்துக் கொண்டுபோக என்ன காரணம் இருக்கிறது? போலீஸ் இன்ஸ்பெக்டர் சொன்னபடி, ஐந்தரை லட்சம் ஜனங்கள் உள்ள இவ்வளவு பெரிய பட்டணத்தில், கற்பனையாகக் குற்றம் சுமத்தப் போலீசாருக்கு இவன்தானா ஏற் படுவான். போலீசார் எவனாவது ஒரு கைதியைச் சம்பாதிக்க வேண்டுமென்றால், இப்பேர்ப்பட்ட யோக்கியனையா பார்த்துப் பிடிப்பார்கள்? சந்தேகமான நடத்தை உடையவன், குடிகாரன், மோசக்காரன், முடிச்சுமாறி, சோம்பேறி முதலிய மனிதர்கள் ஏராளமாக நிறைந்துள்ள இந்த ஊரில் அப்பேர்ப்பட்ட மனிதர் களுள் ஒருவனைப் பிடித்து தண்டனை செய்துவைப்பது எளிது. அதை நியாயாதிபதியும் எளிதில் நம்புவார். இவனைக் கொண்டுபோய் நிறுத்தி, பொய்க் குற்றத்தை ருஜூப்படுத்துவது மகா கடினமான முயற்சி என்பது போலீசாருக்குத் தெரியாதா? இவன் சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவன் நல்ல நடத்தை யுள்ளவன், அப்படி இருந்தும், போலீசார் இவன்மேல் குற்றம் சுமத்தியிருப்பதைப் பார்த்தால், இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது. இவனுடைய வீட்டில் திருட்டுச் சொத்துக்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தனவாம். இவர்கள் திருடா விட்டாலும், திருட்டுச் சொத்தை விலைக்காவது வாங்கியிருக்க வேண்டும். அல்லது அவைகளை ஒளித்து வைப்பதற்காவது இடம் கொடுத்திருக்கவேண்டும். என்னவோ! தெய்வச்செயலாகப் பையன் தப்பிவந்தால், அதிர்ஷ்டந்தான்' என்றனர். வேறு சிலர், "இருந்தாலும், இதனால் பெண் வீட்டா ருக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தைப்போல இந்த உலகத்தி