பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

செளந்தர கோகிலம்



லேயே எவருக்கும் ஏற்பட்டிருக்காது. கலியாணப் பெண்ணுக்கு இந்தப் பையனிடத்தில் நிரம்பவும் பிரியமாம். அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகுமோ தெரியவில்லை. பையன் தண்டனை அடைந்துவிடுவானோ, அல்லது தப்பி வருவானோ என்பது தெரியவில்லை! அவனிடத்தில் பெண்ணுக்கு இருக்கும் ஆச்ை யைப் பார்த்தால், அவன் தண்டனை அடைந்தால்கூட, திரும்பி வந்த பிறகாவது அவனைத்தான் இந்தப்பெண் கட்டிக் கொள்ளும்போல இருக்கிறது” என்றனர். மற்றும் சிலர், "சேச்சே! அப்படி ஒருநாளும் நடவாதப்பா. பையன் தண்டனை அடையா மல் திரும்பி வந்தால் ஒருவேளை இந்தக் கலியாணம் நடந் தாலும் நடக்கலாம். அதுகூடச் சந்தேகந்தான். ஆனால், தண்டனை அடைந்துவிட்டால், அவனுக்கு இவர்கள் பெண் கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் இவர்களுக்கு இன்னொரு பெண் இருக்கிறதே, அதை வேறே யாரும் கட்ட மாட்டார்கள் அல்லவா’ என்றனர்.

இவ்வாறு ஜனங்கள் எல்லோரும் பற்பல யூகங்களும் யோசனைகளும் செய்தவராய் ஒருவரோடு ஒருவர் வியப்போடு பேசிக்கொண்டிருந்தனர். சிலர், அப்படிப்பட்ட துக்ககரமான சம்பவம் நிகழ்ந்த பிறகு, அங்கே இருக்க மனம் அற்றவராய் அவ்விடத்தைவிட்டுத் தங்களது வீடுகளுக்குச் செல்லலாயினர். ஆனால் பெரும்பாலோர் கடைசி வரையில் இருந்து, அந்த விநோதச் சம்பவம் எப்படித்தான் முடிகிறது என்பதை அறிந்து கொண்டே போகவேண்டும் என்ற ஆசையும் ஆவலும் கொண்ட வராய் அந்தப் பங்களாவிலேயே தங்கி இருந்தனர். அப்படி இருந்தவர்களுள் கோவிந்தபுரத்து ஜெமீந்தாரது புத்திரரும் ஒருவர். அவர்கள் எல்லோரும் தளர்வும், துயரமும் நிறைந்த வராய் விசனக் குறிகளோடு உட்கார்ந்திருந்தனர். ஆண்பாலரான ஜனங்களது நிலைமை அப்படி இருக்க, பெண்பாலார் அனைவரும் ஒன்றுகூடி கோகிலாம்பாள், பூஞ்சோலையம்மாள், கற்பகவல்லியம்மாள் ஆகிய மூவரையும் சூழ்ந்து அவர்களைத் தேற்றித் தெளிவித்து ஆறுதல் கூறி, அவர்களது வியாகுலத்தை விலக்க முயன்றுகொண்டிருந்தனர்.

தனது உயிருக்கு உயிராக மதித்து நிரம்பவும் ஆழ்ந்து காதலித்திருந்த மணாளனான கண்ணபிரானுக்கு நேர்ந்த எதிர்