பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

செளந்தர கோகிலம்



ததைக்கண்டு மற்ற எல்லோரும் ஒடி அவளுக்குச் வைத்தியோ பசாரம் செய்ததையெல்லாம் கற்பகவல்லியம்மாள் தனது துயரப் பெருக்கில் உணராமல், தணலில் வீழ்ந்த புழுவெனத் துடித்துக் கரைந்து அழுது பாகாய் உருகிக்கொண்டு கிடக்க, அதைக்கண்டு நிரம்பவும் இரக்கங்கொண்ட வேறுசில பெண்டீர், அந்த அம்மாளைப்பிடித்துத் தூக்கி அன்பாகவும் பட்சமாகவும் அவ ளுக்குப் பற்பல ஆறுதல் கூறி இன்னொரு விடுதியிலுள்ள ஒரு கட்டிலின்மேல் விடுத்து கண்ணபிரான் தண்டனையடைய மாட்டான் என்றும், அதிசீக்கிரத்தில் திரும்பி வந்துவிடுவான் என்றும் கூறி தைரியப்படுத்தி, தேறுதல் கூறிக்கொண்டிருந்தனர்.

தங்களுக்கு அவ்வளவு கேவலமான இழிவு ஏற்பட்டபிறகு தான் பூஞ்சோலையம்மாள் கோகிலாம்பாள் முதலியோரது முகத்தில் எப்படி விழிக்கிறது என்ற கலக்கமும், தன் மகன் தப்பி வருவானோ மாட்டானோ என்ற திகிலும் கொண்டவளாய் கற்பகவல்லியம்மாள் அழுதழுது உருகி வாடிக்கொண்டிருந்தாள். தாங்கள் எதிர்பார்க்காத அப்படிப்பட்ட மகோன்னத நிலைமை தங்களுக்குக் கிடைப்பதைப்பற்றித் தான் ஆநந்த சாகரத்தில் ஆழ்ந்து அளவளாவி இருக்க, முடிவில் கடவுள் தங்களுடைய தலையின்மீது பெருத்த இடியைக்கொணர்ந்து வைத்து தங்களைப் பாதாளத்தில் அழுத்திவிட்டானே என்ற ஏக்கமும் துயரமும் பொங்கிப்பொங்கி எழுந்தன. அப்படிப்பட்ட அருமை யான பெரிய மனிதரது சிநேகமும், பெருமைப்பாடும் தங்களுக்கு சில தினங்களுக்கு மாத்திரம் கிடைக்க ஈசன் எழுதி இருந்தானோ என்றும் அவர்கள் இனி தங்களைச் சரிசமானமாக மதிக்க மாட்டார்களே என்றும் நினைத்து நினைத்து அந்த அம்மாள் நெடுமூச்செறிந்தாள். தங்களுக்கு அவர்களது நட்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஜனங்களிற்கு எதிரில் தனது மகன் அவமானம் அடைந்து சிறைச்சாலைக்குப் போனதைவிட, அவர்களோடு பழகாத நிலைமையில் தங்களுடைய வீட்டில் இருந்தபடி போலீசார் தனது மகனைப் பிடித்துக்கொண்டு போயிருந்தால், அவன் திரும்பிவந்து பிறகு வேறே ஏழையாக இருக்கும் யாராகிலும் ஒருவர் அவனுக்குப் பெண் கொடுப்பார்களே என்றும், மலையின் அடியில் இரண்டொரு படிகளிலிருந்து தவறிவிழுந்து சொற்ப காயம் பெறாமல், திடீரென்று உச்சிக்குப்