பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

செளந்தர கோகிலம்



உயிர்க்கழுவில் நின்று மரண அவஸ்தை அடைந்து தவிக்குமோ, அவ்வாறு கோகிலாம்பாள் துடி துடித்து ஒரே மெளனமாகப் படுத்திருக்க, அவளது அகக்கண் அந்த அபாரமான விசனத்தின் சுமையைத் தாங்கமாட்டாமல் இரத்தக் கண்ணிர் சொரிந்து கொண்டிருந்தது.

அவளது உயிர் மண்ணிற்கும் விண்ணிற்குமாக ஊச லாடியது. தனக்கும் கண்ணபிரானுக்கும் கலியாணம் முடிவதற்கு முன்பாகவே தான் அவனது விஷயத்தில் அவ்வளவு அதிகமான துயரம் அடைந்து மயங்கி அத்தனை ஜனங்களிடையில் கீழே வீழ்ந்ததைப்பற்றி, அங்கே கூடியிருந்த பெண்டீர் யாவரும் என்ன நினைத்துக்கொள்ளுவார்களோ என்ற கிலேசமும் வெட்கமும், இன்னொரு புறத்தில் மூர்த்தண்ணியமாக எழுந்து அவளைச் சகிக்கமாட்டாத சஞ்சலத்தில் ஆழ்த்தியது. அப்படிப் பட்ட விவரிக்க இயலாத மகா துன்பகரமான நிலைமையில், அத்தனை ஸ்திரீகளும் அவ்விடத்தில் சூழ்ந்துகொண்டு தனக்கு உபசரணைபுரிந்து தனது விஷயத்தில் அநுதாபம் காட்டியது அந்தப் பெண்மணிக்கு எமவாதையாக இருந்தது. ஆகையால், அவர்கள் எல்லோரும் ஒன்றும் செய்யாமல் தன்னை மாத்திரம் தனியாக இருக்கவிட்டு அப்பால் போவார்களானால், அதுவே நிரம்பவும் இன்பகரமாக இருக்கும் என்ற எண்ணமும் ஆவலும் கோகிலாம் பாளது மனத்தை வதைக்கத்தொடங்கின. ஆகையால், முன்கூறப் பட்டபடி கண்ணைத்திறந்து பார்த்த கோகிலாம்பாள் அத்தனை ஜனங்களுக்கு முன் தான் பரமவிகாரமான நிலைமையில் இருந்த தைப்பற்றி மிகுந்த லஜ்ஜையும் நாணமும் அடைந்தவளாய் அவள் தனது கண்களை மூடிக்கொண்டாள்.

அவ்வாறு அவள் கண்களைத் திறந்ததைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்த பூஞ்சோலையம்மாள் அவளது முகத்திற்கு அருகில் தனது முகத்தை வைத்துக்கொண்டு நயமாகவும் அன்பாகவும் பேசத்தொடங்கி, 'கண்ணு கோகிலா! உடம்பு என்ன செய்கிறது? டாக்டரை வரவழைக்கட்டுமா?" என்று மிகவும் தணிவான குரலில் வினவ, உடனே கோகிலாம் பாள் தனது தாயின் செவியில் மட்டும் படத்தக்கபடி நிரம்பவும் மிருதுவாகப்பேசத்தொடங்கி, "அம்மா இத்தனை ஜனங்களுக் கும் நடுவில் இருப்பது எனக்குக் கொஞ்சமும் சகிக்கவில்லை.