பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 257

வேறே யாரும் இல்லாத தனியான அறையில் என்னைக் கொண்டுபோய் விட்டுவிடுங்கள்; எனக்கு உடம்பில் எவ்வித நோயும் இல்லை; டாக்டருக்குச் சொல்லியனுப்ப வேண்டாம்: நீங்களும் புஷ்பாவதியம்மாளும் மாத்திரம் என்னோடு இருந் தால், அதுவே போதுமானது; என் உடம்பில் ஒன்றுமில்லை; நான் இன்னம் கொஞ்ச நேரத்தில் எழுந்துவிடுவேன்' என்று ரகசியமாகக் கூறினாள்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் சிறிது தயக்கம் அடைந்தாள். அவ்வளவு பட்சமும் அநுதாபமும் காட்டி உபசரணை புரியும் ஸ்திரீகளையெல்லாம் அப்பால் போகும்படி தான் எப்படி தெரிவிக்கிறது என்பதை உணராது பூஞ்சோலையம் மாள் தத்தளித்தாள். அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த புஷ்பாவதியும் கோகிலாம்பாள் சொன்ன சொற்களை நன்றாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆதலால், பூஞ்சோலையம்மாள் இன்ன காரணத்தினால் தயங்குகிறாள் என்பதை அவள் சுலபத் தில் யூகித்துக்கொண்டவளாய், சடக்கென்று எழுந்து நின்று பூஞ் சோலையம்மாளை நோக்கிப் பேசத்தொடங்கினாள். ஆனால் அவள் அந்த விடுதியில் இருந்த சகலமான ஜனங்களுக்கும் கேட்கும்படியாக உரக்கப்பேசி, 'குழந்தைக்கு உடம்பில் ஒன்று மில்லையாம்; நிம்மதியாக அரைநாழிகை நேரம் துரங்கினால், உடம்பு தெளிந்துபோகுமாம். குழந்தையை இந்த இடத்திலிருந்து மறுபடியும் தூக்கி இன்னோர் அறைக்குக் கொண்டுபோய் உபத்திரவப்படுத்துவதைவிட நாங்கள் எல்லோரும் பக்கத்து அறையில் போயிருப்பதே சுலபமானதாகவும், சுகமானதாகவும் தோன்றியது. நாங்கள் எல்லோரும் இங்கே இருந்து என்ன பிரமாதமான காரியம் செய்கிறோம். ஒன்றுமில்லை” என்று ஓங்கிக் கூறிவிட்டு, பக்கத்தில் இருந்த ஒரு ஸ்திரீயைப்பார்த்து மகிழ்ச்சியும் புன்னகையும் தோற்றுவித்த முகத்தோடு, "சரி: எழுந்திருங்கள்: நாம் எல்லோரும் பக்கத்து அறைக்குப் போவோம்” என்றாள். அவளது வார்த்தைகள் மணியடிப்பது போல கணிர் கணிர் என்று ஒலித்தன. ஆகையால், அங்கிருந்த எல்லோரது செவியிலும் அவைகள் தெளிவாக வீழ்ந்தன. உட்கார்ந்திருந்த ஸ்திரீகள் எல்லோரும் உடனே குபிரென்று எழுந்து ஒருவரையொருவர் மிகுந்த சந்தோஷத்தோடு நோக்கி,

செ.கோ.i-18