பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 259

அப்படியே இருந்தது. இருந்தாலும் தனக்குக் கணவனாக வரிக்கப்பட்ட கண்ணபிரான் அந்தக் குற்றத்தைச் செய்தவன் அல்லவென்று புஷ்பாவதியும் மற்ற எல்லோரும், தன்னைப் போலவே எண்ணிக்கொண்டிருப்பார்கள் என்றும், ஆகையால் அந்த விபரீதமான சம்பவத்தைப்பற்றி அவர்கள் எல்லோரும் தங்களிடத்தில் உண்மையான விசனமும் அனுதாபமும் காட்டு வார்களன்றி தங்களைப்பற்றி இழிவாக நினைத்து ஏளனம் செய்யமாட்டார்கள் என்றும் கோகிலாம்பாள் எண்ணி இரண்டொரு நிமிஷநேரத்தில் தனது கண்களைத் திறந்து கொண் டவளாய்ப் படுக்கையைவிட்டு எழுந்து உட்கார்ந்து பக்கத்தில் இருந்த திண்டில் அயர்வாகச் சாய்ந்து கொண்டவளாய்த் தனது தாயை நோக்கி, 'அம்மா! நீங்களெல்லோரும் என்னையே கவனித்துக் கொண்டிருக்கிறீர்களே! உங்களுடைய புதிய சம்பந்தி அம்மாள் எங்கே? நம்மைவிட அவர்கள் இந்த விஷயத்தில் நிரம்பவும் அதிகமான துக்கமும் அவமானமும் அடைந்து சங்கடப்பட்டுக் கொண்டிருப்பார்களே! அவர்களை யாராவது கவனிக்கிறார்களா? இப்போது நேர்ந்த சம்பவத்திலிருந்து நாம் அவர்களின்மேல் அருவருப்புக் கொள்ளுவோம் என்று நினைத்து நமக்குத் தெரியாமல் ஒருவேளை பங்களாவை விட்டுப் போய்விட்டார்களோ என்னவோ ஒன்றும் தெரியவில்லையே?” என்று நிரம்பவும் கவலையாகவும் அன்பாகவும் கூறினாள்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள், "அம்மா கோகிலா அந்த அம்மாளுடைய நிலைமை உன்னுடைய நிலைமையைவிட நிரம்பவும் பரிதாபகரமாக இருக்கிறதாம். போலீஸ்காரர் போன வுடனே அவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கீழே விழுந்து புரண்டு பிரலாபித்து நிரம்பவும் சங்கடப்பட்டுக் கதறி அழுதார்கள். நான் சிலரை விட்டு, அவர்களை என்னு டைய படுக்கையறைக்கு அழைத்துக் கொண்டுபோய்த் தேறுதல் சொல்லி, அவ்விடத்திலேயே இருக்கச்செய்யும்படி சொல்லி அனுப்பினேன்; அப்போது நீ ஸ்மரணை தப்பிக் கிடந்தாய். ஆகையால், நான் நேரில் போய் அவர்களைப் பார்க்கக்கூடாமல் போய்விட்டது. நீ இப்போதுதான் விழித்துக்கொண்டாய். அந்த அம்மாள் என்னுடைய படுக்கையறையிலேயே இருப்பதாகவும் ஒரு வேலைக்காரி கொஞ்சநேரத்துக்குமுன் வந்து சொன்னாள்.