பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

செளந்தர கோகிலம்



அவர்களால் நமக்குப் பெருத்த அவமானமும் தலை குனிவும் ஏற்பட்டு விட்டனவே என்றுதான் அந்த அம்மாள் நிரம்பவும் துயரப்படுவதாக வேலைக்காரி சொன்னாள்” என்றாள்.

அந்த வரலாற்றைக்கேட்ட கோகிலாம்பாளது மனம் இளகியது: கண்களிலிருந்து கண்ணிர் சரேலென்று பொங்கி வழிந்தது. சகிக்கமாட்டாத பெருத்த விசனம் தோன்றி அவளது சுந்தர வதனத்தைக் கப்பிக்கொண்டது. அந்தப் பெண்மணி உடனே தனது தாயை நோக்கி, 'அம்மா இப்போது உடம்பில் அசெளக்கியம் ஒன்றுமில்லை. நீங்கள் இனி என்னிடத்தில் இருக்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் உடனே அந்த அம்மாளிடம் போய் அவர்களைத் தேற்றுங்கள். ஒருவேளை அவர்கள் புறப்பட்டுப்போனாலும் போய்விடுவார்கள், அதற்குள் நீங்கள் போகவேண்டும். அவர்களுடைய பிள்ளையின்மேல் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றம் பகைவராலோ அல்லது போலீசாராலோ கட்டுப்பாடாகக்கொண்டு வரப்பட்டு இருக்கிறதென்று நாம் உறுதியாக நம்புகிறோம் என்றும், அவர்களுடைய விஷயத்தில் நாம் இதுவரையில் வைத்திருந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் ஒர் இம்மியளவும் குறைவு ஏற்படாது என்றும், நாம் ஆயிரமல்ல, லக்ஷமல்ல, பணத்தைச் செலவிட்டு, கீர்த்தி வாய்ந்த கெட்டிக்கார வக்கீல் ஒருவரை அமர்த்தி வாதாடச் செய்து அவரைத் தப்புவிக்கலாம் என்றும், நம்முடைய முயற்சிக்கும் மீறி தெய்வ சங்கற்பத்தினால், அவ ருக்கு சர்க்கார் தண்டனை ஏற்பட்டால்கூட, நான் அவருக்கே வாழ்க்கைப்படுவது நிச்சயம் என்றும், நீங்கள் அவர்களுக்கு உறுதிமொழி சொல்லி, அவர்களைத் தேற்றி இங்கேயே இருக்கச் சொல்லுங்கள்; அவர்களுடைய பிள்ளைகூட இல்லாத இந்த நிராதரவான நிலைமையில், அவர்கள் வேறே எங்கேயும் போகக் கூடாது. அவர்கள் விசனப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களைச் சேர்ந்த பொறுப்பு. கலியாணத்துக்கு வந்த ஜனங்கள் எல்லோரும் இன்று முழுதும் இருந்து, அவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கும் விருந்தை உண்டு விட்டுப் போகும்படி ஆள்கள் மூலமாக எல்லோருக்கும் செய்தி சொல்லியனுப்புங்கள். இந்தப் பழி அபாண்டமாக ஏற்பட்டி ருக்கிறதென்றும் அவர் விடுதலையடைந்து வந்தவுடனே