பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 264

மறுபடியும் முகூர்த்தப் பத்திரிகை அனுப்புவதாகவும், அவர்கள் இப்போதுபோல மறுபடியும் வந்திருந்து கலியாணத்தை நடத்திவைக்க வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனங்களுக்குச் சொல்லியனுப்புங்கள். இனி என்னைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம் நேரமாகிறது. நீங்கள் முதலில் அவர்களிடம் போங்கள்” என்று வற்புறுத்திக் கூறினாள்.

அவளது வசனத்தைக் கேட்ட பூஞ்சோலையம்மாள் சிறிதும் யோசிக்காமல், "சரி, நான் போய் நீ சொன்னபடியே செய்கி றேன். நீ எழுந்து எங்கேயும் நடக்கவேண்டாம். இங்கேயே படுத் திரு புஷ்பாவதியம்மாள் உனக்குத் துணையாக இங்கே இருப்பார்கள். அவர்களிடத்தில் பேசிக்கொண்டிரு” என்று கூறிவிட்டு, அன்பும் புன்னகையும் அரும்பிய முத்தோடு புஷ்பாவதியை நோக்கி, "நான் போய்விட்டு வரட்டுமா? அதுவரையில் இங்கேயே இருக்கிறீர்களா?” என்று கேட்க, அவள் 'ஓ போய்விட்டு வாருங்கள் கோகிலாவைத் தனியாக விடக் கூடாது; நான் இங்கேயே இருக்கிறேன்” என்று கூறினாள். உடனே பூஞ்சோலையம்மாள் அவ்விடத்தைவிட்டுப் போய் விட்டாள்.

அவ்வாறு கோகிலாம்பாளோடு தனியாக விடப்பட்ட புஷ்பாவதி உடனே கோகிலாம்பாளிடத்தில் எந்த வார்த்தையும் சொல்லாமல், எதையோ கவனிப்பவள் போலத் தனது முகத்தை வேறே பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். ஏனென்றால், கோகி லாம்பாள் தனது தாயினிடத்தில் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவுடனே அவளது முகம் சடக்கென்று மாறிவிட்டது; மனம் நிரம்பவும் சஞ்சலம் அடைந்து சிந்தனையில் ஆழ்ந்தது. அன்றையதினம் கண்ணபிரானுக்கு நேர்ந்த அவமானத்திலிருந்து, அவனைக் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது என்ற உறுதி கோகிலாம்பாளுக்கும் அவளது தாய்க்கும் ஏற்பட்டிருந்தது என்றும், தனது அண்ணனைக் கலியாணம் செய்துகொள்வதற்கு அப்போதாவது அவர்கள் இணங்குவார்களென்றும் அதுவரையில் புஷ்பாவதி எண்ணியிருந்தாள். ஆனால் கண்ணபிரான் தண்டனை அடைந்தால்கூட, தான் அவனையே கலியாணம் செய்துகொள்ளப் போவதாக அந்த அழகிய மடந்தை உறுதி