பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

செளந்தர கோகிலம்



யாகக் கூறிய வார்த்தையைக் கேட்கவே, புஷ்பாவதியின் மனமும் முகத்தோற்றமும் உடனே மாறுபட்டுவிட்டன. அதை அவள் அறியாதபடி தான் மறைத்துக்கொள்ள வேண்டுமென்ற கருத்தோடு, புஷ்பாவதி தனது வதனத்தை வேறே பக்கத்தில் திருப்பி இரண்டொரு நிமிஷநேரம் அப்படியே இருந்து, தனது சஞ்சலத்தை அடக்கிக்கொண்டு கோகிலாம்பாளின் பக்கம் திரும்பி, 'அம்மா கோகிலா! நீ நல்ல விவேகி என்பதை நான் பல தடவைகளில் அறிந்துகொண்டிருக்கிறேன். உனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. இருந்தாலும், இன்றைய தினம் நேர்ந்த மகா விசனகரமான விஷயத்தினால் உன் மனம் நிரம் பவும் கலங்கி மயங்கிப்போயிருக்கிறது என்பது நீ மூர்ச்சித்துக் கீழே விழுந்ததிலிருந்தே நன்றாக விளங்கும். இந்தச் சந்தர்ப் பத்தில் உன் மனசுக்குச் சில விஷயங்கள் படாமல் போவது இயற்கைதான். அதைப் பிறர் எடுத்துச் சொல்லத்தான் வேண்டும். அதைப்பற்றி நீ ஆபாசப்பட மாட்டாய் என்று நான் நம்புகிறேன். நீ இப்போது உன்னுடைய அம்மாளிடத்தில் சொல்லியனுப்பிய சங்கதிகளில் இரண்டொரு விஷயம் என் மனசுக்கு சரியாகத் தோன்றவில்லை. நான் சொன்னால் உனக்கு என் மேல் கோபம் உண்டாகுமோ என்னவோ!' என்று நயமாகவும், உருக்கமாகவும், உரிமையாகவும் கூறினாள்.

அதைக்கேட்ட கோகிலாம்பாளது முகம் உடனே மாறு பட்டது. அவள் புஷ்பாவதியை நோக்கி, "நான் சொன்ன எந்த விஷயம் சரியாகத் தோன்றவில்லை. சும்மா சொல்லுங்கள். ஒரு வருக்கொருவர் அபிப்பிராயபேதம் ஏற்படுவது ஸ்கஜமே. அதைப்பற்றி ஒருவருக்கொருவர் ஆயாசப்படலாமோ ஒரு நாளும் கூடாது. பரவாயில்லை; நீங்கள் சொல்லுங்கள்” என்று அடக்கமாகவும் இனிமையாகவும் மறுமொழி கூறினாள்.

உடனே புஷ்பாவதி, 'அம்மா ஒரு மனிதருக்கு ஏதாவது துன்பம் நேர்ந்துவிட்டால், அவருக்கு மற்றவர் தம்மால் இயன்ற வரையில் ஆறுதல் சொல்லி, அவர்களுடைய விசனத்தைக் குறைக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதுபோல, இப்போது இந்தக் கற்பகவல்லியம்மாளுக்குத் தேறுதல் சொல்லும்படி நீ உன்னுடைய அம்மாளை அனுப்பியது நியாயமான காரியம். ஆனால், அந்த அம்மாளுடைய பிள்ளை விடுதலையடைந்தாலும்