பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

செளந்தர கோகிலம்



விட அதுதான் சரியான சமயம் என்று எண்ணி, முன்னுக்கு வந்து ஆதரித்து, அந்த அவமானத்தை விலக்கி, துார பந்துக்கள் தாம் செய்தது தவறு என்று உணர்ந்து வழிக்கு வரும்படி செய்வார்கள். ஆகையால், நீங்கள் நியாயத்துக்குக் கட்டுப்பட வேண்டுமே யன்றி, அநியாயத்தைக் கண்டு பயந்து அதற்குக் கட்டுப்பட்டு நடப்பது சரியாகுமா? பிறகு, தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர் களுக்கும் என்ன பேதம் இருக்கிறது! எங்களிடத்தில் உங்களுக்கு இருக்கும் அந்தரங்கமான பிரியத்தைக் கருதி, நீங்கள் கொஞ்சம் பிரயாசை எடுத்துக் கொண்டு, உங்களுடைய பந்துக்கள் எல்லோருக்கும் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவர்கள் திருப்தி அடையும்படி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நீங்கள் எங்களுக்கு அபாண்டமாக ஏற்பட்ட இந்தக் களங்கத்தை விலக்கி தான பேருதவியைச் செய்தவர்களாவீர்கள் என்று நிரம்பவும் விநயமாகவும், மனதில் பதியும்படி அவ்வளவு அதிக உருக்கமாகவும் கூறினாள்.

அவளது மனோதிடத்தையும் உறுதியையும் கண்ட புஷ்பா வதியம்மாள், அதற்குமேல் அவளை அதிகமாக வற்புறுத்தக் கூடாது என்ற நினைவைக் கொண்டவளாய், "சரி, நீ சொல்வது நியாயமான விஷயம். நான் சொன்னது எங்களைக் குறித்தல்ல; நான் பொதுவான உலக நியாயத்தை எடுத்துச் சொல்லி உன்னு டைய மனசு எப்படி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்த்தேன். இந்தக் கண்ணபிரான் முதலியாரும், அவருடைய தாயாரும் நிரம்பவும் யோக்கியமான மனிதர்கள் என்பது நன்றாகத் தெரி கிறது. அவர்கள் ஒருநாளும் இப்படிப்பட்ட இழிவான காரியத் தில் இறங்கக் கூடியவர்கள் அல்ல. இது போலீசாரால் கற் பனையாகக் கொண்டுவரப்பட்டது என்றே நான் எண்ணுகி றேன். நாம் இந்த ஆபத்துக் காலத்தில் அவர்களைக் கைவிடக் கூடாது; நம்மாலான உதவிகளையெல்லாம் செய்து அவரை விடு விக்கும்படியான வழிகளைத் தேட வேண்டும். என்னுடைய தமயனாருக்கும், எனக்கும் எப்படியாவது உங்களுடைய வீட்டி லேயே சம்பந்தம் செய்ய வேண்டும் என்ற ஒரே பிடிவாதமான எண்ணம் இருந்து வருகிறது; கட்டினால் உன்னைக் கட்டுகிறது: இல்லையானால், உன்னுடைய தங்கையைக் கட்டுகிறது என்பதே எங்களுடைய முடிவான தீர்மானம். எங்களுடைய பந்துக்கள்