பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

செளந்தர கோகிலம்



அதைக்கேட்ட புஷ்பாவதி மிகுந்த மகிழ்ச்சியினால் இனிமையாக மலர்ந்த முகத்தினளாய் அவளை நோக்கி, "சரி; எப்படியாவது இருவருடைய மனசும் ஒத்துப்போய்விட்டால் பிறகு நாம் செளகரியம்போல மற்ற காரியங்களை நடத்திக் கொள்ளுவோம்; எல்லாவற்றிற்கும், இந்த வழக்கின் விசாரணை முடியட்டும்; அதன் பிறகு கலியாணப் பேச்சைப்பற்றிப் பேசிக் கொள்ளுவோம்; நீ இப்போது ஒரு காரியம் செய்கிறாயா? நான் கால் நாழிகை நேரம் வெளியில் போய்விட்டு வருகிறேன், அது வரையில் நீ தனியாக இருக்கிறாயா?” என்று நயமாக வினவினாள். ,

கோகிலாம்பாள், "போய்விட்டு வாருங்கள். எனக்கு இப் போது உடம்பில் எவ்விதக் கோளாறுமில்லை. நான் தனியாகவே இருக்கிறேன்” என்றாள்.

புஷ்பாவதி, "வேறொன்றுக்கும் இல்லை. இந்த நிச்சய தார்த்தம் முடிந்த உடனே, என்னுடைய தமையனார் ஒர் அவசர ஜோலியாக இவ்விடத்தை விட்டுப் போகவேண்டும் என்று சொல்லியிருந்தார். இப்போதுதான் இந்த எதிர்பாராத இடைஞ் சல் சம்பவித்துவிட்டதே. அவர் இப்போது வெளிமண்டபத்தில் இருக்கிறாரோ அல்லது புறப்பட்டுப் போய்விட்டாரோ என்பது தெரியவில்லை. நான் இப்போது உன்னிடத்தில் பேசிய விஷயங்கள் எல்லாம் அவருடைய மனசிலும் சங்கடப்படுத்திக் கொண்டிருக்கும். நான் போய் அவரைக் கண்டு, நீ இப்போது தெரிவித்த விஷயங்களை ல்ெலாம் சொல்லி அவருடைய மனசை சாந்தப்படுத்திவிட்டு வருகிறேன்; அதுவும் அல்லாமல், அவருக்கு நல்ல முதல் தரமான வக்கீல்கள் இடத்தில் எல்லாம் பழக்கம் உண்டு. இந்த வழக்கில் வக்கீல் அமர்த்தி மற்ற காரியங்களை எல் லாம் நடத்த ஒத்தாசை செய்யும்படியும், புறப்பட்டுப் போகாமல் இங்கேயே இருக்கும்படியும் அவரிடத்தில் சொல்லிவிட்டு வருகிறேன். அதற்காகத்தான் போகவேண்டும். வேறே வேலை ஒன்றும் இல்லை,” என்றாள்.

அதைக்கேட்ட கோகிலாம்பாளது சுந்தரவதனம் நன்றியறி தலின் பெருக்கினாலும், மகிழ்ச்சியினாலும் மலர்ந்து ஜ்வலித்தது. அவள் புஷ்பாவதியை நோக்கி, ‘சரி, போய் வாருங்கள்.