பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

செளந்தர கோகிலம்



அதைக்கேட்ட கோகிலாம்பாள் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சா கமும் அடைந்து, "சரி, நிரம்பவும் சந்தோஷம். தங்களுடைய குணத்தழகில் இருந்தே தங்கள் தமயனாருடைய குணம் எப்படி இருக்கும் என்பது விளங்கவில்லையா? செளந்தரவல்லியின் கலியான விஷயத்தில், நான் சொன்னதை அவரும் ஒப்புக் கொண்டது எனக்கு நிரம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. வக்கீல் வைக்கும் விஷயத்தைப் பற்றி நான் என்னுடைய தாயாரி டத்திலும், என் மாமியாரம்மாள் இடத்திலும் கலந்துபேசி, அதன் பிற்பாடு முடிவைத் தெரிவிப்போம். அதிருக்கட்டும்; நீங்கள் வெளியில் போனிர்களே, ஜனங்கள் எல்லோரும் இருக்கிறார் களா? போய்விட்டார்களா? அவர்கள் இந்தச் சம்பவத்தைப்பற்றி என்ன சொல்லிக் கொள்ளுகிறார்கள்?’ என்றாள்.

புஷ்பாவதி, "அநேகமாய் எல்லா ஜனங்களும் இருக்கிறார் கள். இதைப் போலீசார் கட்டுப்பாடாகக் கொண்டு வந்திருக்கி றார்கள் என்றே எல்லா ஜனங்களும் நினைத்து விசனம் அடைந் திருக்கிறார்கள்” என்றாள். கோகிலாம்பாள், 'அப்படியா! சந்தோஷம் வெகுஜன வாக்கு தெய்வ வாக்குக்குச் சமம் என்று சொல்வது உண்டு. அதுபோல, அவர்களுடைய வாக்காவது பலிக் கட்டும். வாருங்கள் என்னுடைய அம்மாள் இருக்கும் அந்தப் புரத்துக்கு நாம் போய் வக்கீல் வைக்கும் விஷயத்தைப்பற்றிப் பேசி ஏற்பாடு செய்வோம். இப்படியே பின்புறமாக ஒரு கதவு இருக்கிறது. அதன் வழியாக நாம் போனால், நம்மை மற்ற ஜனங்கள் பார்க்க மாட்டார்கள்” என்று கூறிக்கொண்டே எழுந் திருந்தாள். உடனே அவர்கள் இருவரும் பக்கத்தில் இருந்த பின் புறக் கதவைத் திறந்துகொண்டு, பூஞ்சோலையம்மாளது அந்தப் புரத்தை அடைந்தனர். அவ்விடத்தில் கற்பகவல்லியம்மாள் பூஞ்சோலையம்மாள் ஆகிய இருவர் மாத்திரம் தனியாக உட்கார்ந்திருந்தனர். பூஞ்சோலையம்மாள் கற்பகவல்லியம்மா ளுக்கு ஆறுதல் சொல்லித்தேற்றிக் கொண்டிருந்தமையால் அந்த அம்மாள் சிறிது தெளிவும் துணிவும் அடைந்து எழுந்து உட் கார்ந்து போலீசாரைப்பற்றி நிரம்பவும் ஆத்திரமாகப் பேசிக் கொண்டிருந்தாள். அப்போது புஷ்பாவதியும், கோகிலாம்பாளும் வந்ததைக் காண அவர்கள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து, கோகிலாம்பாள் குணமடைந்து எழுந்து வந்ததைப் பற்றி