பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 27封

நிரம்பவும் சந்தோஷமடைந்தவர்களாய், 'வாருங்கள், வாருங் தள் என்று மிகவும் அன்பாக உபசரிக்க வந்தவர் இருவரும் போய் நெருங்கினர். புஷ்பாவதி ஒர் ஆசனத்தில் உட்கார்ந்து தொண்டாள். கோகிலாம்பாள் தனது மாமியார் இருப்பதைக் கருதித் தரையின்மீது ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டாள். -

உடனே புஷ் பாவதி கற்பகவல்லியம்மாளை நோக்கி, "அம்மா! உங்களுக்கும், இந்தக் குடும்பத்தாருக்கும் இன்றைய தினம் நேரிட்ட இடரைப்போல இவ்வளவு மகா பயங்கரமான தீமை, இந்த உலகத்தில் வேறே எவருக்கும் நேர்ந்திருக்காது என்றே நினைக்கிறேன். முன்காலத்தில் பூர் ராமர், நளச்சக்கர வர்த்தி, தருமபுத்திரர் முதலியோருக்கு ஏற்பட்ட கஷ்டங் களையும், இழிவுகளையும் நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட மகா மகா சக்கரவர்த்திகளின் கதியே அப்படி ஆயிற்றே: கேவலம் மனிதர்களான நாம் எந்த மூலை? இதெல்லாம் கிரகசாரம். மனிதர் இந்த ஜென்மத்தில் குற்றம் செய்திருந்தால்தான் இப்படிப்பட்ட பயங்கரமான அவகேடு எல்லாம் உண்டாகும் என்று நினைப்பது சுத்தத் தப்பான எண்ணம். நிரபராதிகளான சிலருக்கு இப்படிப்பட்ட தீமை நேர்வது எல்லாம் ஈசனுடைய சோதனை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவுக்கு அவ்வளவு அபாரமான சன்மானம் பின்னால் கிடைக்கப் போகிறது என்பதற்கு இது அறிகுறி. ஆகையால், நீங்கள் இந்த விஷயத்தைப்பற்றி விசனமாவது வெட்கமாவது அடையத் தேவை இல்லை. எல்லாம் கடைசியில் நன்மையாகவே முடியும். நாம் நிரம்பவும் மேதாவியான ஒரு வக்கீலை அமர்த்தி வாதாடச் செய்தால், இந்தப் பழி ஒரு நிமிஷத்தில் நிவர்த்தியாகிவிடும். உங்களுடைய புத்திரர் கூடிய சீக்கிரம் வந்து சேர்ந்துவிடப் போகிறார். தங்கத்தைப் புடம் போடுவதால், அதன் மாற்று அதிகரிக்கும் என் பார்கள். அதுபோல அவருடைய அருமை பெருமைகளை எல்லாம், கருடன் காவில் கெச்சை கட்டியதுபோல, இந்த வழக்கே உலகத்தாருக்கு நன்றாகக் காட்டப் போகிறது அல்லது தெய்வச் செயலாக, அவருக்குத் தண்டனை நேர்ந்துவிட்டால் கூட, அப்போதும் நாங்கள் உங்களைக் கைவிடப் போகிற தில்லை. அவர் திரும்பி வந்தவுடனே கோகிலாம்பாள் அவரைக்