பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

செளந்தர கோகிலம்



கட்டிக்கொள்ளப் போகிறாள். நாங்கள் அதை ஏளனமாக மதிக்காமல், இப்போதைய ஏற்பாட்டின்படி செளந்தரவல்லியம் மாளைக் கொள்ளப்போகிறோம்; இங்கே கூடியிருக்கும் ஜனங்கள் எல்லோரும் தங்களுடைய குமாரருக்கு நேர்ந்த பொல் லாங்கு அபாண்டமானது என்றும், அவர் அந்தக் குற்றத்தைச் செய்தே இருக்கமாட்டார் என்றும் சொல்லிச் சொல்லி அங்க லாய்த்து, அப்படியே துயரக்கடலில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். ஆகையால் அவருக்குத் தண்டனை ஏற்பட்டால்கூட, ஜனங்கள் எல்லோரும் அதை ஒர் இழிவாக மதித்து ஏளனம் செய்ய மாட்டார்கள் எல்லோரும் வந்திருந்து இந்தக் கலியாணத்தை நிரம்பவும் சந்தோஷமாக நடத்தி வைப்பார்கள்; ஆகையால் நீங்கள் எந்த விஷயத்தைப் பற்றியும் கொஞ்சமும் கவலை கொள் ளவே வேண்டாம்; குற்றம் செய்தவர்கள் அல்லவா வெட்கிக் குன்ற வேண்டும்; குற்றம் செய்யாத நாம் நம்முடைய ஆண் மையை இழக்கவே கூடாது" என்று நிரம்பகம் உருக்கமாகவும் அந்தரங்கமான அன்போடும் கூற, அதுகாறும், புஷ்பாவதி தங்களைப்பற்றி எவ்விதமான கேவல அபிப்பிராயம் கொண் டிருக்கிறாளோ என்ற அச்சத்தினால் குன்றிக் குறுகி சஞ்சலம் அடைந்து தவித்திருந்த கற்பகவல்லியம்மாளது மனம், சூரியனைக்கண்ட தாமரை அரும்பு மலர்வதுபோல சந்தோஷத் தினால் மலர்ந்தது; அந்த அம்மாள் கரை கடந்த ஆநந்தமுற்றுப் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தவளாய் மிகுந்த நன்றியறிதலும் அன்பும் கண்களின் வழியாக ஓடவிட்டவளாய்ப் புஷ்பாவதியை நோக்கி, 'அம்மா! நீங்கள் சொல்லுகிறபடி, இன்றைய தினம் எங்களுக்கு நேர்ந்த பொல்லாங்கைப்போல இவ்வளவு பயங்கர மானது இந்த உலகத்தில் வேறே யாருக்கும் நேர்ந்திருக்காது என்பது உண்மையானாலும், உங்களையும் இவர்களையும் போன்ற உண்மையான பெருந்தன்மை நிறைந்த மனிதர்களு டைய அபிப்பிராயமும், அன்பும், அபிமானமும் மாறாமல் முன் போலவே இருப்பதைக் காண, என் மனம் பூரிக்கிறது; இப்போது, அந்தப் பொல்லாங்கு என்னை அவ்வளவாக வதைக்க வில்லை. உங்களைப் போன்றவர்களுடைய பக்கபலமும், அன்பும் எங்களுக்குத் துணையிருக்க, எங்களுக்கு எவ்விதக் குறைவும் ஏற்படாது. நாங்கள் இந்த விஷயத்திலாவது வேறே