பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 273

எந்த விஷயத்திலாவது தவறாக நடந்து கொண்டிருக்கக் கூடிய வர்கள் அல்ல என்பதைப்பற்றி நீங்கள் எல்லோரும் ஒரே உறுதி யான நம்பிக்கை வைத்திருப்பது ஒன்றே எங்களுக்குப் பதினா யிரம் யானையின் பலத்தைக் கொடுக்கிறது. இதோ இருக்கும் இந்த வீட்டு எஜமானியம்மாளும் இதே மாதிரியான ஆறுதலை யும் தைரியத்தையும் இதுவரையில் எனக்குச் சொல்லிக் கொண்டு தான் இருந்தார்கள் இருந்தாலும் இந்த விஷயத்தில் நீங்களும் மற்ற ஜனங்களும் என்ன நினைப்பீர்களோ என்ற அதைரியமும், சஞ்சலமும் இருந்து வந்தன. இப்போது உங்களுடைய வார்த் தையைக் கேட்க, நான் இனி தலை குனியாமல் எல்லா ஜனங்க ளுக்கு முன்பாகவும் போகலாம் என்ற ஒரு தைரியம் உண்டாகி விட்டது” என்றாள். 3.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள், 'மாணிக்கக்கட்டி, பொல்லாத வேளையின் பலனாக, சில காலம் குப்பையில் கிடக்க நேர்ந்தாலும், அதனால் அதற்கு மதிப்புக் குறைவு ஏற் பட்டது என்று யாராவது சொல்ல முடியுமா? ஒரு நாளும் முடியாது. அந்த மாணிக்கத்தை யாராவது இகழ்ந்தால், அப்படி இகழ்கிறவர்களைத்தான் மற்றவர் பைத்தியக்காரர் என்பார்கள்,” என்று நிரம்பவும் அன்பாகவும் பரிவாகவும் கூறினாள்.

அதைக்கேட்டு முன்னிலும் பன்மடங்கு பூரித்துப் புளகாங்கிதம் எய்திய கற்பகவல்லியம்மாள் ஏதோ விஷயத்தைப் பற்றிப் பேச முயன்ற சமயத்தில் அவர்கள் இருந்த இடத்திற்கு நிரம்பவும் அருகில் பெருத்த கூக்குரலும் ஆரவாரமும் உண் டாயின. ஜனங்கள் பெருத்த கும்பலாகக் கூடி அபாரமான கூக் குரல் செய்து, 'அடியுங்கள் குத்துங்கள் கொல்லுங்கள் குழியை வெட்டி உயிரோடு புதைத்து விடுங்கள்” என்று பலவாறு ஆர்ப்பரித்த பெருங்கோஷம் சமீபத்தில் உண்டாயிற்று.

வேடனது குரலைக் கேட்ட மான்கள் திடுக்கிட்டு ஸ்தம்பித்து நின்று நிமிர்ந்து நாற்புறங்களிலும் திரும்பி ஆராய்ந்து பார்ப்பதுபோல, கற்பகவல்லியம்மாள், பூஞ்சோலையம்மாள், புஷ்பாவதியம்மாள், கோகிலாம்பாள் ஆகிய நால்வரும் சடேரென்று எழுந்து மருண்டு நின்று அந்தப் பயங்கரமான ஆரவாரம் எங்கேயிருந்து உண்டாகியது என்பதை உற்றுக்

செ.கோ.i-19