பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

செளந்தர கோகிலம்



கவனித்தனர். அவரது தேகம் உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் கிடுகிடென்று ஆடியது. பெருத்த திகிலினால் உரோமம் சிவிர்த்து நின்றது. உடம்பு முழுதும் வியர்வை குபிரென்று பொங்கி வெள்ளம்போல வழிந்தது. இன்னதென்று அறியக்கூடாது பெருத்த திகில் வயிற்றைக் குழப்பி மனதைக் கலக்குகிறது. அது எப்படிப்பட்ட புதிய பேரிடியோ என்ற பெருங்கிலியும் கலவரமும் எழுந்து அவரது அகக்கண்ணில் மகா பயங்கரமான பெருத்த பூதங்கள் போலத் தோன்றி அச்சுறுத்தின. அன்றைய தினம் காலையில் போலீசார் கண்ணபிரானைப் பிடித்துப் போன சம்பந்தமாக இன்னமும் ஏதாவது வேறே துன்பம் நேரப் போகிறதோ என்றும், அந்தக் குற்றத்தில் ஒருவேளை கற்பக வல்லியம்மாளையும் சம்பந்தப்படுத்தி போலீசார் அவளையும் வாரண்டில் பிடிக்க வந்திருக்கிறார்களோ என்றும் அவர்கள் எண்ணாததை எல்லாம் எண்ணித் தவித்தார்கள். அந்த ஒரு நிமிஷ நேரமும் ஒரு கற்பகாலம் போலத் தோன்றியது. அவர்களது மனதில் கோடாதுகோடி எண்ணங்கள் தோன்றி மறைந்தன. தாங்கள் இருந்த கட்டிடத்திற்குள் அந்த ஆரவாரம் உண்டாயிருக்குமோ என்று அவர்கள் கவனிக்க உட்புறத்தில் இது உண்டாகவில்லை என்பது தெரிந்தது. அவர்கள் இருந்த அந்தப்புரத்தில் ஒரு ஜன்னல் இருந்தது. அந்த ஜன்னல் அந்தப் பங்களாவின் பூஞ்சோலையை அடுத்திருந்தது. ஆகையால், ஜன்னலண்டை நின்று வெளியில் பார்த்தால் பக்கத்தில் சோலை காணப்படும். அந்த ஜன்னலிற்குப் பக்கத்தில் வெளியிலிருந்து அந்த ஆரவாரம் உண்டானது நன்றாகத் தெரிந்தது. ஆகையால் அவர்கள் நால்வரும் மிகுந்த ஆவலும், கலக்கமும், திகிலும் கொண்டவர்களாய், அந்த ஜன்னலண்டை ஒடினர் கண்ண பிரான் அதில் சம்பந்தப்பட்டிருப்பானோ என்பதை அறிய ஆவல்கொண்ட கற்பகவல்லியம்மாளும் பூஞ்சோலையம்மாளும் முதலில் போய் ஜன்னலின் நடுவில் நின்று பார்த்தார்கள். புஷ்பாவதி கோகிலாம்பாள் ஆகிய இருவரும் இரண்டு பக்கங் களிலும் நின்று வெளியில் பார்த்தனர்.

ஜன்னலிற்கு வெளிப்பக்கத்தில், கலியாணத்திற்காக வந்திருந்த ஜனங்கள் எல்லோரும் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்றனர். அவர்கள் வீரவேசமும், பதைபதைப்பும் கொண்டவர்க