பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 275

ளாய் நடுவில் பாய முயன்று கொண்டிருந்தனர். அந்தக் கும்பலின் நடுவில் நன்றாகக் குடித்துவிட்டு ஆடி விழுந்துகொண்டிருந்த ஏழெட்டு முரட்டு மனிதர்கள் காணப்பட்டனர். அத்தனை ஜனங்களுக்கும் அவர்கள் ஈடு கொடுத்துக் கொண்டு, குமுறிக் குமுறி ஆபாசமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுள் முரட்டுத் துருக்க சாயப்பு ஒருவன் இருந்தான். அவனும் குடி வெறி கொண்டவன்போல ஆடி விழுந்து கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் கற்பகவல்லியம்மாள் முதலியோர் வந்து ஜன்ன வின் உட்புறத்தில் நின்றதைக் கண்டவுடனே அந்த சாயப்பு தலைகால் தெரியாமல் எழும்பிக் குதித்து, பெருத்த கூக்குரல் செய்யத் தொடங்கி, 'இத்தினி தமிளரும் சேர்ந்து அந்த பொம் புளெ இங்ங் இல்லேயின்னு பொய் சொன்னீங்களேடா அதோ இருக்கிறாளேடா என்னோடெ கூத்தியா அடி எங் கூத்தியாளே! வாடி கீளே எறங்கி; நீ இங்ஙனமே வந்து நொளஞ்சிக்கினா, இந்த சிங்கக் குட்டி பாச்சாமியான் ஒன்னே உட்டுடுவானுன்னு பாத்துக்கினியா? இத்தோடே என் உசுரு போயிட்டாலும் சரி; ஒன்னெ நான் உடப்போகிறதில்லே. வாடி கீளே எறங்கி! என் னமோ ஒண்ணுந்தெரியாத பைத்தியக்காரி கணக்கா முளிக்கி றியா இந்த நாலு நாளா ஒங்களெ நான் எந்தெந்த எடத்துலெ யெல்லாம் தேடிப்பார்க்கறேன்; நீங்க குந்தினாப்பலெ இந்த பங்களாவுக்குள்ளா வந்து நொளெஞ்சுக்கினு கண்ணாளமா பண்ணப்போறிங்க? என் உசிரு இருக்கிறவரெயிலே அந்தத் தாலி எவளோடெ களுத்துலெயாச்சம் ஏறிப்புடுமா? அந்தத் தாலியெக் கட்டிக்கின களுத்து அந்த ஒடலுமேலே ஒரு ராத்திரிக்கூட நிக்குமா? தாலியும் போயிரும், களுத்தும் போயிரும் பத்திரம். இந்த நல்லாம்படையான் பாச்சாமியான் வேண்டியிருந்த வரை யிலெ, கண்ணாளப் பேச்செல்லாம் வேறே மாதிரியா இருந்திச்சு. இப்ப பெரிய பணக்கார ஆட்டெத் தேட்றீங்களோ' என்று குடி வெறியினால் குழறிக் குழறிப் பேசி, ஜன்னலில் நின்றவர்களை நோக்கி ஆரவாரம் செய்ய, அப்போது அந்தக் கும்பலில் துடி துடித்து நின்ற கோவிந்தபுரம் இளைய ஜெமீன்தாரான சுந்தர மூர்த்தி முதலியார் தமது கையில் பிடித்திருந்த குதிரைச் சவுக்கைச் சொடேர் சொடேர் என்று வீசி ஓசை செய்து அந்தக் குடிகாரத் துருக்கனை நோக்கி வந்து, "அடேய் யாரைப்