பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

செளந்தர கோகிலம்



பார்த்தடா இப்படித் தாறுமாறாகப் பேசுகிறாய்? குடிவெறியில் தலைகால் தெரியவில்லை போலிருக்கிறது. நீ இனிமேல் மரி யாதைக் குறைவான வார்த்தை ஏதாவது பேசினால், உன்னையும் உன்னுடைய தோழர்களான இந்த நாய்களையும் உயிரோடு இவ் விடத்திலேயே சமாதி வைத்துவிடுவோம். சாக்கிரதை பேசாதே நீ யார் ஒய்? இந்த பங்களாவுக்குள் நீங்கள் எல்லோரும் எதற்காக வந்தீர்கள்? யாரோ பெண்பிள்ளை இந்த பங்களாவுக்குள் வந்திருக்கிறாள் என்று சொல்லுகிறாயே? அது என்ன குடிவெறி யினால் பேசிய பேச்சா?" என்று அதிகாரமாக அதட்டிக் கேட்ட வண்ணம், நிரம்பவும் துணிவாக நெருங்கி அந்த சாயப்புவின் கையைப் பிடித்துக் கொள்ள, அவருக்குப் பக்கத்தில் இருந்த வேறே சிலரும், அந்த சாயப்புவையும் மற்ற குடிகாரரையும் இறுகப் பிடித்துக் கொண்டனர். .

அதற்குமேல் தனது கை ஓங்காது என்பதைக் கண்ட முரட்டுத் துருக்கன் ஜெமீன்தாரைப் பார்த்து மரியாதையாகப் பேசத் தொடங்கி, "எஜமானே கோவம் வாணாம். நாம்ப, ஜாதி யிலே ஏளெமுசல்மானாக இருந்தாலும், நம்ப வாயிலே இருந்து பொய் வரமாட்டான். நாம்ப இந்த வங்களாவிலே கலகம் கிலகம் பண்ண வர இல்லெ. நம்பளோடே நாயத்தை எடுத்துச் சொல்றேன் கேளுங்கோ. நம்ப மேலே கொஞ்சமாச்சும் தப்பிதம் இருந்தா, ஒங்க காலுலே இருக்கிற ஜூத்தியாலே எண்ணி ஆயிரம் அடி நம்பிளிகி அடியுங்கோ. நம்ப உசிரு போனாலும் நம்ப பொய் சொல்லமாட்டாங்கோ. நம்ப தொளிலு மாடுங் களெ அடிச்சு விக்கிற கசாப்புக்காரத் தொளிலுதான். இருந்தா லும், நம்ப அல்லாவுக்குப் பயந்து நடக்கிறவங்க. அதோ ஜன்ன லுக்குள்ளற மத்த எல்லாருக்கும் நடுப்புற நிக்கறாளே. அவள கப் பகவல்லியம்மான்னு சொல்லுவாங்க. அவளுக்கும் நம்பளுக்கும் இந்தப் பதினஞ்சு வருஷகாலமா தொடுப்பு உண்டுங்க. நாம்ப நம்பளோடே சம்பாத்தியத்தெல்லாம் இவுங்களுக்கே குடுத்துக் குடுத்து நம்பளோடெ குடியே முளிகிப்போச்சுங்க. நம்புளுக்கு ஒரு தங்கச்சி இருக்குதுங்க. இந்தப்பொம்புள்ளெயும் இவ ளொடெ மவனுக்குக் கட்டிப்புட்றதின்னும் ஒப்பந்தம் முடிஞ்சி ருக்குது. அந்த மாதிரி நடக்கிறேனுன்னு இந்தப் பொம்புள்ளே லச்சம் தரம் கையடிச்சு சத்தியம் பண்ணிக் குடுத்திருக்கிறா.