பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

செளந்தர கோகிலம்



பாச்சாமியான் கூறிய வார்த்தைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் கேட்டு மிகுந்த பிரமிப்பும் கலவரமும் கலக்கமும் அடைந்து, அது பூலோகமோ ஆகாயமோ என்பதை உணராமல் தாங்கள் கண்ட காட்சியும், கேட்ட சொற்களும் கனவைச் சேர்ந்தவைகளோ அல்லது உண்மையில் நிகழ்வனவோ என்று மயங்கி, திக்பிரமை கொண்டு, ஸ்தம்பித்து அசைவற்று, அப்படியப்படியே சிறிது நேரம் நின்றனர். அந்தக் குடிகாரத் துருக்கன் சொன்னது நிஜமாக இருக்குமோ என்று சந்தேகிப்பவர்கள் போல, அவர்கள் மூவரும் ஆச்சர்யமும், ஐயமுமே வடிவெடுத்ததுபோல நிற்க, அந்தச் சமயத்தில் கற்பகவல்லியம்மாள் மயங்கிக் கீழே வீழ்ந்ததைக் கண்டு, நிரம்பவும் பதறித் துடித்தவர்களாய்ப் பயந்து, அந்த அம்மாளைத் தூக்கியெடுத்துக் கொண்டு போய் பக்கத்தில் இருந்த ஒரு கட்டிலின்மீது விடுத்து, அவளது மூர்ச்சையைத் தெளிவிப்பதற்குத் தேவையான உபசரணைகளையெல்லாம் புரியத் தொடங்கினர். -

அவர்களது நிலைமை அங்ங்ணம் இருக்க, ஜன்னலிற்கு வெளியில் நின்ற மற்ற ஜனங்களது நிலைமையும் விவரிக்க இயலாததாக இருந்தது. பாச்சாமியான் சொன்ன அபூர்வமான வரலாற்றைக் கேட்டு அதை என்னவென்று மதிப்பது என்பதை உணராது எல்லோரும் திக்பிரமை கொண்டு கல்லாய்ச் சமைந்து அவனது முகத்தையும் ஜன்ன்லையும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றனர். ஆனாலும் அவர்கள் ஒவ்வொருவரது உடம்பும் கை கால்களும் மீசைகளும் துடிதுடித்துப் பதறின. அவன் போலீ லாரது போதனையால் அவ்வாறு கட்டுப்பாடாகப் பேசுகி றானோ என்ற சந்தேகமே தோன்றியது. ஆனாலும், போலீசார் அவ்வளவு பிரமாதமான கற்பனை செய்ய என்ன முகாந்திரம் இருக்கப்போகிறது என்ற சந்தேகமும் தோன்றியது. கற்பக வல்லியம்மாளது தோற்றத்திலிருந்தே அவள் பெருந்தகைமையும், நற்குண நல்லொழுக்கமும் பூரணமாக வாய்ந்தவள் என்பது தெரிந்தது. ஆகையால், அந்த அம்மாளிடத்தில் தப்பான அபிப் பிராயம் கொள்ள அவர்களது மனம் இடந்தரவில்லை. அந்த சாயப்பு அவ்வளவு துணிகரமாகப் பேசும்போது அதை மறுத்துப் பேசி அவனிடத்தில் சச்சரவு செய்வதற்கும் வகையில்லை. ஆகவே, ஜனங்கள் சுந்தரமூர்த்தி முதலியார் என்ன சொல்லப்