பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

செளந்தர கோகிலம்



அதைக்கேட்ட சுந்தரமூர்த்தி முதலியார் மிகுந்த கோபம் அடைந்தவராய் அவனது கையை அழுத்தமாகப் பிடித்து, 'அடேய் நல்ல யோக்கியமான பெரிய மனிதர்களைப் பற்றி நீ பிரமாதமான அவதூறு பேசுகிறாய். உன்னை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும்; வா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவோம். நான் உன்னை அவரிடத்தில் ஒப்புவிக்கிறேன் கோஷா ஆஸ்பத்திரியிலும் போய் விசாரிப்போம்; அவர்கள் சொல்லுகிறபடி நடந்து கொள்வோம்; நீ அன்னியருடைய கட்டிடத்துக்குள் சொந்தக்காரருடைய அநுமதியில்லாமல் நுழைந்து இப்படிக் கலகம் செய்தால், உன்னை நாங்கள் எப்படி வேண்டுமானாலும் தண்டிக்க உரி மையுண்டு. ஏதோ நீ குடித்துவிட்டு உளறுகிறாய் என்று உன்னை அவ்வளவு கொடுமையாக தண்டிக்க இஸ் டமில்லை; வா போவோம்” என்று கூறிய வண்ணம் இழுக்க, அவன் உடனே பணிவடைந்தவனாய், "சரி எசமர்ன் இப்போது சொன்னது சரியான பேச்சு போலீசுக்கே போவலாம்; அங்கே வந்து நாம்ப எல்லாச் சங்கதியையும் நெசமின்னு ருசுப்படுத்த தடெயில்லே வாங்க, போவலாம்,' என்று கூறிய வண்ணம் முறுக்காகவும், மிடுக்காகவும் நடந்து சுந்தர மூர்த்தி முதலியாரைத் தொடர்ந்து சென்றான். அவனது தோழர்களான மற்றவர்களும், ஜனங்களும் கூடவே நடக்க, எல்லோரும் அந்தப் பங்களாவை விட்டு வெளியில் சென்றனர்.

★ ★ 女

தொடர்ச்சி அடுத்த பாகத்தில்...